Politics
ராமர் கோவில் கும்பாபிஷேகம் : கிறிஸ்தவ தேவாலயத்தின் சிலுவையில் காவி கொடியை ஏற்றிய இந்துத்துவ கும்பல் !
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில், ராமர் இருப்பதாக கூறி இந்துத்வ கும்பல் அதனை இடித்த நிலையில், தற்போது அங்கே ராமர் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. மக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரது எதிர்ப்புகளையும் மீறி ஒன்றிய பாஜக ராமர் கோயிலை நேற்று அரசியல் நோக்கத்திற்காக திறந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தற்போது இந்த கோயில் திறக்கப்பட்டுள்ளது முழுமையாக அரசியல் நோக்கத்திற்காகவே என்று கூறி காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தது.
இந்த நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஒரு இந்துத்துவ கும்பல் கிறிஸ்தவ தேவாலயத்தின் மேல் ஏறி, காவி கொடிகளை ஏற்றிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஜபுவாவில் கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ளது.
இங்கு கடந்த ஞாயிற்றுகிழமை அன்று வழக்கம் போல ஜெபக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் அங்கு வந்த இந்துத்துவ கும்பல் ஒன்று ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று முழக்கமிட்டுள்ளது. அதோடு நிற்காத அந்த கும்பல் தேவாலயத்தின் மீது ஏறி, அங்கிருந்த சிலுவையில் காவிக்கொடியை ஏற்றியுள்ளது.
இதனை அங்கிருந்த தேவாலயத்தின் போதகர் ஒருவர் தடுத்து நிறுத்த முயன்ற நிலையில், அவரைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அந்த கும்பல் அந்த செயலில் ஈடுபட்டுள்ளது. இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!
-
”ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுதாகர் ரெட்டி” : முதலமைச்சர் இரங்கல்!
-
2035-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம், 2040-ல் நிலவில் தரையிறங்கும் திட்டம் - இஸ்ரோ தலைவர் பேச்சு !
-
"ஹமாஸின் தலைநகரமான காசா அழிக்கப்படும்"- இஸ்ரேல் அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை !