Politics
"நிலுவை தொகையை கொடுங்கள், அல்லது பதவியை விடுங்கள்" - மோடி அரசை விமர்சித்த மம்தா பானர்ஜி !
மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எல்லா பொருட்கள் மீதும் ஜி.எஸ்.டி வரியை விதித்து வருகிறது. இதனால் உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவது சாமானிய மக்களைப் பாதித்துள்ளது.
தற்போது இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வரும் நிலையில், அரசி, பருப்பு, பால் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது. மேலும் பல பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரியை அதிகரித்துள்ளது. இப்படி மக்களிடம் சுரண்டப்படும் ஜி.எஸ்.டி வரியில் மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய பங்கை உரிய காலத்தில் கொடுக்காமல் ஒன்றிய அரசு தாமதம் செய்து வருகிறது.
அதிலும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் அதிக அளவில் ஒன்றிய அரசுக்கு ஜி.எஸ்.டி வரியை அளித்துவரும் நிலையில். அதில் தமிழ்நாட்டுக்கு கொடுக்கவேண்டிய பங்கு வராததால் பல மக்கள் நல திட்டங்கள் நிறைவேற்றமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பாஜக ஆளான அனைத்து மாநிலங்களையும் இந்த வகையிலேயே பாஜக வஞ்சித்து வருகிறது.ட
இந்த நிலையில், எங்கள் மாநிலத்துக்கு கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடுங்கள் அல்லது பதவியை விடுங்கள் என்று மோடியை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அங்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், " மேற்கு வங்காளத்திற்கு வரவேண்டிய 1.15 லட்சம் கோடியை பாஜக அரசு விடுவிக்காமல் இருக்கிறது. அது மக்களின் பணம். ஏழை மக்களின் பணத்தைக் கொடுங்கள் அல்லது பதவியை விடுங்கள் என்று முழக்கத்தை எழுப்பவிருக்கிறேன்.
நான் எம்.பி.க்களுடன் டெல்லிக்கு செல்ல உள்ளேன். டிசம்பர் 18 முதல் டிசம்பர் 20 வரை நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரிக்கை வைக்க பிரதமரிடம் நேரம் கேட்டுள்ளேன். மாநிலத்தின் நிலுவைத் தொகையை சரியான முறையில் ஒன்றிய அரசு வழங்கியிருந்தால், தனது அரசு தனது சமூக நலத் திட்டங்களின் கீழ் மேலும் பலரை இணைத்திருக்க முடியும்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!