Politics
"பாஜகவுடன் கூட்டணி அமைக்கமாட்டோம்" - மிசோரம் மாநிலத்தின் பிரதான இரு கட்சிகளும் அறிவிப்பு !
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் வரும் 3-ம் தேதி (ஞாயிறு) எண்ணப்படுகிறது. அன்றே முடிவுகளில் அறிவிக்கப்படுகிறது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அதே போல தெலுங்கானாவில் பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே போட்டி நிலவுகிறது. ஆனால், வடகிழக்கு மாநிலமான மிசோரம் நிலை வேறு விதமாக இருக்கிறது.
இங்கு, பாஜக சிறிய கட்சியாக இருக்கும் நிலையில், மிசோ தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம் மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. மிசோரம் மாநிலத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், தொங்கு சட்டசபை அமையவே வாய்ப்பு அதிகம் என்றும் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக பாஜகவுடன் கூட்டணி சேர வாய்ப்பு இருக்கிறதா என மிசோ தேசிய முன்னணி கட்சித் தலைவருமான ஜோரம்தங்காவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த "நாங்கள் இதுவரை பாஜகவைக் கூட்டணிக்கு அழைக்கவில்லை. அதேபோல அவர்களும் எங்களைக் கூட்டணிக்கு அழைக்கவில்லை. தேர்தலுக்கு பின்னர் பாஜகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பே கிடையாது" என்று தெரிவித்தார்.
அதே கேள்வியை ஜோரம் மக்கள் முன்னணி தலைவர் வன்லால்த்தனாவிடம் எழுப்பியபோது, "தொங்கு சட்டசபை அமைந்தாலும் நிச்சயம் பாஜக உடன் கூட்டணி இருக்காது. மிசோரம் விவகாரத்தை பாஜக மிக மோசமாகக் கையாள்கிறது. இதற்கு மக்களிடையே கடும் கோபம் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் பாஜகவுடன் கூட்டணி அமைக்கமாட்டோம் என்பதை மிசோரம் மாநிலத்தின் முக்கிய கட்சிகளான மிசோ தேசிய முன்னணி மற்றும் ஜோரம் மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் பகிரங்கமாக அறிவிப்பு. தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகளின் படி, காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி வைக்கிறதோ அவர்களே அங்கு ஆட்சியமைக்க முடியும் என்று கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சர்வதேச அளவில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் தொடக்கம்.. சச்சினை முந்திய வரலாற்று நிகழ்வு : முழு தகவல் அறிய!
-
கோவில் குடமுழுக்கில் பிரச்சனை.. தட்டிக்கேட்ட பெண்ணை கொடூரமாக தாக்கிய தவெக நிர்வாகி -கொந்தளிக்கும் மக்கள்!
-
தவெக அரசின் அட்டூழியம்.. புகாரை அடுக்கிய திமுக.. அதிர்ந்து போன ஆளுநர் மாளிகை! - முழு பட்டியல் இதோ!
-
FIFA 2026: திணறிய அர்ஜென்டினா.. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கேப் வெர்டே அணி!
-
"ஆள் பிடிப்பதற்காகவே த.வெ.க ஆட்சி நடக்கிறது!" - ஆளுநரிடம் ஆர்.எஸ்.பாரதி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!