Politics
சீனாவில் சூதாட்டத்தில் 3.5 கோடியை இழந்த மாநில பாஜக தலைவர் : சிவசேனா குற்றச்சாட்டால் அதிரும் மகாராஷ்டிரா !
மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பின்னர் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி வைத்த நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.
சுமார் 3 ஆண்டுகள் நீடித்த இந்த அரசு சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் மூலம் கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பாஜகவோடு கூட்டணி சேர்ந்து, ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே சீனாவில் ஒரே நாளில் தாட்டத்தில் ரூ.3.5 கோடியைச் செலவு செய்திருப்பதாக, உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், " மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே சீனாவில், மூன்று மணி நேரம் சூதாட்டம் விளையாடி ரூ.3.5 கோடியை இழந்திருக்கிறார். அதுவும் அந்த பணத்தை அமெரிக்க டாலரில் கொடுத்திருக்கிறார். இதனை பாஜக இதை மறைக்கப் பார்க்கிறது.
மகாராஷ்டிராவில் பல்வேறு பிரச்னைகளால் மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் பவன்குலே சூதாட்டத்தில் பொழுதைக் கழிக்கிறார்இது தொடர்பாக என்னிடம் 27 புகைப்படங்கள், ஐந்து வீடியோக்கள் இருக்கின்றன. ஆனால் நான் அதை வெளியிடவில்லை. அதை வெளியிட்டால் அவருக்கும், அவரின் கட்சியின் சங்கடமாகிவிடும்" என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”பொய் செய்தியற்ற சமூகத்தை அமைப்போம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன் : லண்டன் சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
26 நிறுவனங்கள் - ரூ. 7,020 கோடி முதலீட்டு : ஜெர்மனி பயணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
சென்னையில் நீர் மெட்ரோ திட்டம்... முதற்கட்ட பணிகள் தொடக்கம் : செயல்படுத்தப்படும் 53 கி.மீ நீள பாதை என்ன?
-
மழைநீரைச் சேமிப்பதில் தீவிரம் காட்டும் சென்னை மாநகராட்சி... 4 ஆண்டுகளில் 70 குளங்கள் புனரமைப்பு !