Politics
"பாஜக ஆட்சிக்கான கவுண்டவுன் சங்கை வேலையில்லா இளைஞர்கள் ஊதுவார்கள்" : மல்லிகார்ஜூன கார்கே தாக்கு!
இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டில் வர்த்தகம், தொழில் வளர்ச்சி, முதலீடுகள், வேலைவாய்ப்புகள் என அனைத்துத் துறைகளும் முற்றிலும் சிதைந்து போயுள்ளன.
குறிப்பாக வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வேலையில்லாமல் இருந்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் வேலையில்லா திண்டாட்டத்தின் சதவீதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கடந்த ஐந்து ஆண்டில் மட்டும் வேலையின்மை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதனால், ஆண்டுக்கு 2 கோடி வேலை என்ற பிரதமரின் வாக்குறுதி என்ன ஆனது? என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டின் வேலையில்லா இளைஞர்கள்தான் பா.ஜ.க ஆட்சிக்கு கவுண்டவுன் என்ற சங்கை ஊதுவார்கள் என காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
இது குறித்து மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், "நாட்டில் வேலையின்மை விகிதம் 10% க்கும் அதிகமாக உள்ளது. மந்தநிலை மற்றும் பணவீக்கத்திற்கு மத்தியில், மோடி அரசாங்கம் இதுபோன்ற “வேலையின்மை கண்காட்சியை” ஏற்பாடு செய்துள்ளது, இது கோடிக்கணக்கான இளைஞர்களை வீடு வீடாக அலைய வைக்கிறது. நாட்டின் வேலையில்லா இளைஞர்கள்தான் பாஜக ஆட்சிக்கு கவுண்டவுன் என்ற சங்கை ஊதுவார்கள்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அப்பாவை வரவேற்கிறோம்...” - ஜெர்மனியில் முதலமைச்சரை உற்சாகமாக வரவேற்ற தமிழர்கள்!
-
உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பெண்... நீதிபதிகள் நியமனத்தில் பாகுபாடு என புகார் !
-
விமான நிலையத்தின் பொறுப்பாளராக ரூ. 232 கோடி முறைகேடு... CBI-யால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !
-
ஜெகதீப் தன்கரின் அரசு இல்லத்தை காலி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு... புதிய வீடு ஒதுக்கப்படாததால் அதிர்ச்சி !
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !