Politics
“இது தான்தோன்றித்தனமான முடிவு!” - TNPSC தலைவர் நியமன விவகாரத்தில் ஆளுநர் ரவிக்கு வைகோ கண்டனம் !
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்று சொல்லப்படும் TNPSC தேர்வு தமிழ்நாட்டில் நடைபெறும். இந்த போட்டித்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாட்டின் அரசுத் துறைகளுக்கு தேவையான ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். 14 உறுப்பினர்களை கொண்ட இந்த தேர்வாணையத்தில் தலைவர் பதவி நியமிக்கப்படாமல் காலியாக உள்ளது.
எனவே இதனை சரிசெய்ய TNPSC தலைவர் பதவியை நிரப்ப வேண்டும் என்ற நோக்கில், தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற காவல் அதிகாரி டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை தேர்வு செய்தது. பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலை பெறுவதற்காக பரிந்துரை கடிதமானது கடந்த ஆகஸ்ட் மாதம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதனை ஆளுநர் ரவியோ, திருப்பி அனுப்பி விட்டார்.
இதற்கு தமிழ்நாடு அரசு மற்றும் பிற அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்து வலுத்த கண்டனங்கள் எழுந்தது. தொடர்ந்து ஆளுநரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் எழுந்து வந்த நிலையில், இந்த தேர்ந்தெடுப்பு எதனடிப்படையில் நடைபெற்றது என்று விளக்கம் கேட்டு ஆளுநர் மாளிகை தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியது.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநருக்கு விளக்க கடிதமும் அனுப்பப்பட்டது. அதில் அனைத்து விளக்கமும் தெளிவாக குறிப்பிட்டு தமிழ்நாடு அரசு அனுப்பியிருந்தது. இந்த சூழலில் தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் முன்னாள் டி.ஜி.பி சைலேந்திர பாபு நியமனத்தை நிராகரித்துள்ளார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஆளுநர் ரவியின் இந்த செயலுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இதுகுறித்து மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள தனது கண்டன அறிக்கையில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (டி.என்.பி.எஸ்.சி.,) தலைவராக நேர்மையாளரான முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு அவர்களை நியமிக்குமாறு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருந்தது.
சைலேந்திர பாபு அவர்களுக்கு அந்தத் தகுதி இல்லை என்று தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் ரவி நிராகரித்திருப்பது அவரது அதிகார எல்லையை மீறிய தான்தோன்றித்தனமான சர்வதிகார முடிவாகும். தமிழக அரசு செய்கின்ற பரிந்துரைகளை எல்லாம் நிராகரிக்கும் ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஏஜெண்டாகச் செயல்படுகின்ற தமிழக ஆளுநருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!