Politics
"ஒன்றிய அரசின் துணை ராணுவம் தேவையில்லாத செயல்களில் ஈடுபடுகிறது" -மணிப்பூர் பாஜக அரசு விமர்சனம் !
மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வெடித்து வன்முறையாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் மெய்தி சமூகத்தினர், குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 90 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த வன்முறையை பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வந்துள்ளது.இந்த வன்முறையில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் காங்கோக்பி மாவட்டத்தின் பி பைனோ கிராமத்தை சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த தாக்கி, அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து சென்றுள்ளனர்.
அதன் பின்னர் அவர்களை கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். மணிப்பூரில் இணையதளம் முடக்கப்பட்டு பின்னர் அங்கு இணையம் மீண்டும் வழங்கப்பட்டபோது சுமார் 3 மாதங்களுக்கு பின்னர் இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்து நாட்டையே உறையவைத்தது.
மேலும் இதுபோன்ற பல்வேறு கொடுமையான சம்பவங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தவண்ணம் உள்ளன.எனினும் ஒன்றிய, மாநில பாஜக அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அங்கு தற்போது பல்வேறு இடங்களில் வன்முறை தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், மணிப்பூரில் கடந்த 8-ம் தேதி பாலல் என்ற பகுதியில் ஒன்றிய அரசின் துணை ராணுவப்படையினருக்கும், கலவரக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ராணுவத்தினரின் தாக்குதலில் 3 கலவரக்காரர்கள் உயிரிழந்த நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் மணிப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து நேற்று கூடிய மணிப்பூர் மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் பாலல் சம்பவத்துக்காக ஒன்றிய துணை ராணுவப்படையினருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், துணை ராணுவப்படையினரும் இந்த செயலை ஒன்றிய அரசிடம் புகைரளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும், ஆயுதப்படைக்கான அதிகாரத்தை விரிவு படுத்தவும், பதற்றமான பகுதியில் வீரர்களுக்கான சிறப்பு அதிகாரத்தை மேலும் ஆறு மாதத்திற்கு நீட்டிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மாநில பாஜக அரசு ஒன்று ஒன்றிய அரசின் படைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!