Politics

'கலைஞர் நூற்றாண்டு நூலகம்' - தென் மாவட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் -தி இந்து நாளேடு புகழாரம் !

மதுரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரைக்கு மட்டுமல்ல; தென் மாவட்ட மக்களுக்கும் ஒரு வரப்பிரசாதம் என்று அங்கு செல்கின்ற வாசகர்கள் கருதுவதாக ‘தி இந்து' ஆங்கில நாளேடு நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தி வருமாறு:- மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த சனிக்கிழமையன்று திறந்தார். மறு நாள் ஞாயிற்றுக்கிழமை அந்த நூலகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் திரண்டு வந்து அங்குள்ள புத்தகங்களை காண்பதை காண முடிந்தது. மதுரைக்கு மட்டுமல்ல; தென் மாவட்ட மக்கள் அனைவருக்குமே இந்த நூலகம் ஒரு வரப்பிரசாதம் என்று அங்கு வருகை தந்த வாசகர்கள் கருத்து தெரிவித்தனர். நூலகத்திற்குள் நுழைந்தவுடனே, மதுரையின் பெருமைகளை விளக்கும் புகைப்ப டங்கள் அடங்கிய கேலரி பகுதியினை வாசகர்கள் காண முடிகிறது.

சிறுவர்களின் ‘காமிக்' புத்தகங்களை விரும்பிப் படிக்கும் 9ஆம் வகுப்பு மாணவன், தான் விரும்பும் காமிக் புத்தகம் இங்கு ஏராளமாக இருப்பதால், இனி இங்கு அடிக்கடி வரப் போவதாக கூறினான். அனைத்துத் தரப்பினரும் விரும்பிப் படிக்க அனைத்து வகையான புத்தகங்களும் இங்கிருப்பதாக என்.எம்.புண்ணிய மூர்த்தி என்கிற வியாபாரி, இங்கு வந்திருந்தபோது தெரிவித்தார். அவர் தனது மனைவி, மகன்களுடன் வந்திருந்தபோது, அவரது மகன்கள் அவர்களுக்கான புத்தகங்களை தேடுவதில் ஒருபுறம் மும்முரமாக இருந்ததாகவும், இன்னொருபுறம் அவரது மனைவி சமையல் பண்டங்கள் புத்தகங்கள் பார்த்துக் கொண்டிருந்ததகாவும் இப்படி ஒவ்வொருவரும் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ற புத்தகங்களை தேடிப் படிக்கும் வகையில் பல்வேறு புத்தகப் பிரிவு கள் இருப்பது குறித்து அவர் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த நூலகத்தில் உள்ள கலந்துரையாடும் பிரிவு தம்மை வெகுவாகக் கவர்ந்ததாக கே.ஜாகிர் உசேன் என்ற வாசகர் தெரிவித் தார். பொதுவாக நூலகம் என்றால் மிகவும் குறுகலான அறையில் அடுக்கி வைக்கப்பட வேண்டிய புத்தகங்கள் தாறுமாறாக இருக்கும். ஆனால் இங்கு விசாலமான அறை இருப்பதால் நன்கு நூல்களை படிக்க வசதியாக இருக்கிறது என்று குறிப்பிடும் என்.கீதா தேவி என்கிற வாசகி, இங்கு காட்சிபடுத்தக் கூடிய படிக்கும் முறை உள்ளதால் சிறுவர்கள் தாங்கள் படிக்க உள்ளதை புரிந்து கொண்டு கற்க வசதியாக இருக்கிறது என்று பாராட்டு தெரிவித்தார்.

ஆர்ட் காலரி இருக்கும் தரைத் தளத்திலேயே மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவு இருக்கிறது. முதல் தளத்தில் சிறுவர் பிரிவும், அறிவியல் புத்தகப் பிரிவும் உள்ளன.இரண்டாம் தளத்தில் தமிழ்ப் புத்தகங்களும், மூன்றாம் தளத்தில் ஆங்கிலப் புத்தகங்களும், நான்காம் தளத்தில் குறிப் பெடுக்கும் பிரிவும் உள்ளன. ஐந்தாம் தளத்தில் இ-லைப்ரரி என்று சொல்லப்படும் மின் நூலகமும். ஆறாவது தளத்தில் குறிப்புப் புத்தகங்கள் படிக்கும் பகுதி களின் விரிவாக்கமும். நிர்வாக அலுவலக மும் அமைந்துள்ளன.

அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நூலகம் திறந்திருக்கும் என்று தலைமை நூலகர் சி.அமுத வல்லி தெரிவிக்கிறார். வருடத்தில் 8 அரசின் விடுமுறை நாட்களில் மட்டும் நூலகம் மூடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.ல்வேறு அரிய நூல்களும் இங்குள்ள தாகக் குறிப்பிடும் அவர், அனைத்து தமிழ்ப்புத்தகங்களும் கணக்கெடுக்கப்பட்டு குறியிடப்பட்டு விட்டன என்றும், ஆங்கிலப் புத்த கங்கள் குறியிடப்பட்டவுடன் அடுத்த 15 நாட்களுக்குள் உறுப்பினர் சேர்க்கை தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

இந்த கலைஞர் நூலகத்தில் அனைவரையும் கவரும் வசதிகளில் ஒன்று. முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களுடன், சேர்ந்து அமர்ந்து இருக்கும் அனுபவத்தை அளிக்கும் உணர்ச்சிகரமான ஏற்பாடாகும்.பன்னோக்கு வசதிகளுடன் கூடிய மிகப் பெரிய அறை மற்றும் பார்வையாளர் கூடம் என்று கூறப்படும் ஆடிட்டோரியம் இந்த நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் வாசகர்கள் அங்குள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறக்கப்பட்ட கலைஞர் சிலை முன் 'செல்பி" எடுத்துக்கொள்வதை காண முடிந்தது. இவ்வாறு ‘தி இந்து” ஆங்கில நாளேட்டில் செய்தி வெளியாகி உள்ளது.

Also Read: "இந்த காலத்தில் நூலகம் எதற்கு?" மூளையே தேவையில்லை என கருதும் கூட்டத்தின் கருத்து அது -முரசொலி விமர்சனம் !