Politics
"அஜித் பவார் பக்கம் இருக்கும் பலரும் என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்" -சரத்பவாரின் கருத்தால் பரபரப்பு!
மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவை சேர்ந்தவர் முதல்வராக இருக்க ஒப்புதல் கொடுத்தால் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தயார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
ஆனால் இதற்கு உடன்படாத பாஜக தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது.அதைத் தொடர்ந்து பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றார்.ஆனால் இந்த அரசு சில நாட்களில் கவிழ்ந்தது. அதன்பின்னர் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி வைத்த நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.
சுமார் 3 ஆண்டுகள் நீடித்த இந்த அரசு சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் மூலம் கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது சிவசேனா பணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை பாஜக உடைத்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் தலைமையில் 29 எம்.எல்.ஏக்கள் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதில் 8 பேருக்கு உடனடியாக ஆளுநர் அமைச்சராக பதவியேற்பு நடத்திய நிலையில், அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த அரசியல் குழப்பம் எதையும் கண்டுகொள்ளாமல் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "அஜித் பவார் பக்கம் இருக்கும் பலரும் என்னை என்னை தொடர்ந்து தொடர்பு கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் பலர் கட்சியின் கொள்கையைக் கைவிடவில்லை. அவர்கள் தங்களது நிலையை சரியான நேரத்தில் தெரிவிப்பார்கள். ஆனால், நான் இதுவரை யாரையும் தொடர்புகொள்ளவில்லை" என்று கூறியுள்ளார்.
மேலும், இது போன்ற ஒரு நிலையை நான் முன்னர் 1980-ம் ஆண்டு சந்தித்தேன். அப்போது மொத்தமுள்ள 59 எம்.எல்.ஏ-க்களில் ஐந்து பேர் மட்டுமே என்னுடன் இருந்தனர். ஆனால், நான் எனது கட்சிக்காக தீவிர பிரசாரம் செய்தேன். அதனால் அடுத்த தேர்தலில் எங்களை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் தோல்வியைத் தழுவினர். இப்போது என்னுடன் யார் இருக்கிறார்கள், யார் சென்றார்கள் என்பது குறித்து எனக்குக் கவலையில்லை" என்று கூறியுள்ளார்.
Also Read
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
-
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!