Politics

ஒடிசா ரயில் விபத்துக்கு யார் பொறுப்பு? இதற்கு முன் ரயில் விபத்துகளுக்காக பதவி விலகிய ரயில்வே அமைச்சர்கள்!

ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் ஹவுராவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதியது. இதனால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டன.

அப்போது யஷ்வந்த்பூர்- ஹவுரா அதிவிரைவு ரயில் தடம்புரண்டு கிடந்த ரயில் வெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாயின. அடுத்தடுத்து மூன்று ரயில்கள் ஒரே நேரத்தில் விபத்தைச் சந்தித்ததால் கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து நாட்டையை உலுக்கியுள்ளது.

தவறான சிக்கல் கொடுத்த காரணத்தாலே விபத்து நடந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த ரயில் விபத்து எப்படி ஏற்பட்டது என 4 பேர் கொண்டக் குழு ஒன்று முதற்கட்ட விசாரணை நடத்தியுள்ளது.

அதில், "சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பச்சை சிக்னல் முதலில் கொடுத்து விட்டு, உடனே அதை ரத்து செய்துள்ளனர். இதனால் மெயின் லைனுக்கு செல்ல வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் லூப் லைனில் சென்றுள்ளது.

இந்த லுப் லைனில் இருந்த ரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியுள்ளது. இதனால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு மெயின் லைனில் விழுந்துள்ளது. அப்போது அந்த வழியாக வந்த யஷ்வந்த்பூர் - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கியதுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 294 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ள நிலையில், தற்போது இந்த விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அதே நேரம் இந்தியாவில் இதற்கு முன்னர் ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று ரயில்வே துறை அமைச்சர்கள் பதவி விலகியதும் நடைபெற்றுள்ளது.

முதல் முறையாக 1956-ம் ஆண்டு நவம்பர் மாதம் அரியலூரில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 142 பேர் உயிரிழந்தனர். இதற்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு பின்னர் அவர் பிரதமராக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1956-ம் ஆண்டு நவம்பர் மாதம் அரியலூரில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 142 பேர் உயிரிழந்தனர். இதற்கு பொறுப்பேற்று அப்போதைய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

1999-ம் ஆண்டு அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து 310 மைல் தொலைவில் உள்ள கைசல் அருகே இரண்டு அதிவேக ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு ரயில்களில் பயணித்த சுமார் 290 பேர் உயிரிழந்தர். இதற்கு பொறுப்பேற்று அப்போதைய ரயில்வே அமைச்சர் நிதிஷ்குமார் பதவியை ராஜினாமா செய்தார்.

2000-ஆவது ஆண்டில் நேர்ந்த இரண்டு ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று, அப்போதைய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் அந்த ராஜினாமாவை பிரதமர் வாஜ்பாய் நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

2017-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் கைஃபியத் விரைவு ரயில் மற்றும் பூரி-உத்கல் விரைவு ரயில் ஆகியவை நான்கு நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து தடம் புரண்டது. இதில் 23 பேர் உயிரிழந்தனர். இதற்கு பொறுப்பேற்று அப்போதைய ரயில்வே அமைச்சரான சுரேஷ் பிரபு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Also Read: "இந்தியாவில் வணங்கப்படும் நபராக தோனி இருக்கிறார்" - ரசிகர் ஆதரவை கண்டு வியந்த சென்னை அணி வீரர் !