Politics
இந்தியாவின் நாயகர்களை அவமானப்படுத்திய பாஜக.. மல்யுத்த வீரர்கள் தெருவில் இழுத்துச்செல்லப்பட்டு கைது !
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பா.ஜ.க சார்பில் எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார். இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகளைச் செய்வதாகவும், குறைந்தது 10, 12 வீராங்கனைகளுக்கு மேல் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதோடு இவரால் தேசிய பயிற்சி முகாம்களில் நியமிக்கப்பட்ட சில பயிற்சியாளர்கள் பல ஆண்டுகளாகப் பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வருகின்றனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலி போன்றவர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தை வீராங்கனைகள் தற்காலிகமாகத் திரும்பப்பெற்றனர்.பின்னர் விசாரணைக் குழு பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்காததை அடுத்து மல்யுத்த வீரர்கள் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் போராட்டத்தை எப்படியாவது கலைத்துவிட வேண்டும் என ஒன்றிய அரசு சதித்திட்டம் தீட்டி வருகிறது. இதற்கிடையில் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்யவில்லை. இதனால் மல்யுத்த வீராங்கனைகள் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தித் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்ட நிலையில், அதனை முற்றுகையிட்டு மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். இதில் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக ஏராளமான பொதுமக்கள், விவசாயிகள் திரண்டனர். ஆனால், இந்த போராட்டத்தின் போது மல்யுத்த வீரர்கள் மற்றும் பொதுமக்களை தடுப்புகள் வைத்து டெல்லி காவல்துறை தடுத்து நிறுத்தியது.
ஆனால், மல்யுத்த வீரர்கள் மற்றும் பொதுமக்கள் தடுப்புகளை தாண்டி செல்ல முயன்றபோது போலிஸார் அவர்களை தாக்கி கைது செய்தனர். அதிலும், நாட்டுக்காக ஒலிம்பிக் தொடர், ஆசிய தொடர், காமன்வெல்த் தொடரில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளை ஒன்றிய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறைதெருவில் இழுத்துச் சென்று கைது செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டெல்லி காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், நாட்டிற்காக போராடிய ஒரு அரசு இப்படியா நடத்துவது என்று ஒன்றிய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
“Climate Action, Clean Energy ஆகிய இலக்குகளில் தமிழ்நாடு முதலிடம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
பீகாரில் மகளிர் திட்டத்தில் முறைகேடு : ஆண்களின் வங்கி கணக்தில் வரவு வைக்கப்பட்ட பணம்!
-
விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை என்ன? : நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி!
-
மாதவிடாய் சுகாதாரத் திட்டம் பயன் தருகிறதா? : ஒன்றிய அரசுக்கு தி.மு.க MP கேள்வி!
-
“GST நஷ்டத்திற்கு இழப்பீடு வேண்டும்” : நாடாளுமன்றத்தில் ராஜேஷ்குமார் MP வலியுறுத்தல்!