Politics
ரூ.2000 நோட்டு விவகாரம்.. நாடாளுமன்றத்தில் அப்பட்டமாக பொய் கூறினாரா நிர்மலா சீதாராமன் ? பின்னணி என்ன ?
கடந்த 2016-ம் ஆண்டு ஊழலை ஒழிப்பதாக கூறி, இரவோடு இரவாக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மோடி தலைமையிலான ஒன்றிய அரசு அறிவித்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி, தங்களிடம் இருந்த பணத்தை ஏடிஎம்., வங்கி என வரிசையாக நின்று, சாப்பிடாமல் கூட மாற்றிக்கொண்டனர். இந்த நிகழ்வால் பொதுமக்கள் பலவகையில் துன்பங்களை அனுபவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக புது ரூ.500 நோட்டுகளும், ரூ.2000 நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது வரை இந்த ரூபாய் நோட்டுகள் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து குறைய தொடங்கியுள்ளது. இதனால் ரிசர்வ் வங்கி இந்த நோட்டுகளை திரும்ப பெறப்போவதாக அறிவித்துள்ளது.
அதன்படி பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை வரும் மே 23 முதல் செப்டம்பர் 30 வரை வங்ககளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும், நாள் ஒன்றுக்கு ஒரு நபர் ரூ.20,000 மதிப்பிலான ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.மேலும் ரூ.2000 நோட்டுகள் இனிமேல் புதிதாக புழக்கத்துக்கு வராது என்றும், ஏற்கெனவே அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்ட நோட்டுகள் செல்லும் என்றும் தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய பாஜக தலைவர் 2000 ரூபாய் நோட்டுகள் குறைந்த அளவிலேயே புழக்கத்தில் இருப்பதால் இதனால் மக்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என கூறிவருகின்றனர். ஆனால் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் இது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "பணமதிப்பிழப்பிற்கு பிறகு வெளியிடப்பட்ட 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இல்லாமல் போய்விட்டது என்ற தகவல் ஒன்றிய அரசிடம் இல்லை.
2017 மார்ச் முதல் 2022 மார்ச் வரையிலான காலகட்டத்தில் 9.512 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரூ .500 நோட்டுகளும் 27.057 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் மக்களிடையே புழக்கத்தில் உள்ளது. அதன்படி ரூ .500 நோட்டுகளை விட 2000 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கிறது" எனக் கூறியிருந்தார். இதனை மூலம் பாஜக தலைவர்கள் அப்பட்டமாக இந்த விவகாரத்தில் போய் கூறி வருவது உறுதியாகியுள்ளது.
Also Read
-
"அதானி, அம்பானிக்கு செய்ததை போல திருப்பூர்,கோவையைக் காப்பாற்ற மோடி செய்தது என்ன?" - முரசொலி கேள்வி !
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!