Politics
37 ஆயிரம் கோடியிலிருந்து 1000 கோடியாக குறைந்த சிலிண்டர் மானியம்.. மக்களை தொடர்ந்து ஏமாற்றும் பாஜக அரசு!
இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்தே தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் இந்தியாவில் வரலாறு காணாதவகையில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை எட்டியுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.90க்கு மேல் விற்பனையாகிறது. இந்த வரலாறு காணாத விலை ஏற்றத்தால் சமான்ய மக்கள் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
அதோடு தினசரி சமையல் எரிவாயு விலையும் தொடர்ந்து அதிகரித்து மக்களை வாட்டிவதைத்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் சமையல் எரிவாயுக்கு மானியம் எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாவும், அதனால் பொதுமக்களின் வாங்கிக்கணக்குக்கே மானிய தொகையை செலுத்துவதாகவும் மோடி தலைமையிலான பாஜக அரசு அறிவித்து அதனை செயல்படுத்தியது.
தொடக்கத்தில் சில மாதங்கள் இந்த மானிய தொகை சரியாக பொதுமக்களை வந்தடைந்த நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக மானியதொகையை மோடி அரசு குறைத்தது. ஆனால், சமையல் எரிவாயு விலை பலமடங்கு அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், ஒன்றிய அரசால் வழங்கப்படும் மானியம் ஒவ்வொரு ஆண்டும் பல மடங்கு குறைக்கப்பட்டு கொண்டே வருவது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வெளியான தகவலின் அடிப்படையில் 2018-2019ம் ஆண்டில் ரூ.37,209 கோடி வழங்கப்பட மானியம் அடுத்து படிப்படியாக குறைக்கப்பட்டு 2019-2020ம் ஆண்டில் ரூ.24,172 கோடியும் 2020-2021ம் ஆண்டில் 11,896 கோடி ரூபாயும் மானியமாக வழங்கப்பட்டது. இதன் உச்சகட்டமாக 2021-2022ம் ஆண்டில் வெறும் ரூ.1,811 கோடி மட்டுமே மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் 2016ம் ஆண்டு 8 கோடி இணைப்புகளுக்கு மானியம் வழங்கப்பட்ட நிலையில், இந்த இணைப்புகளின் எண்ணிக்கையானது 2023ம் ஆண்டில் வெறும் 1.6 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் முகம் 7.4 கோடி குடும்பங்கள் பாதிக்கப்படும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!