Politics
"ஆட்சிக்கு வந்தால் மாணவிகளுக்கு இலவச Scooty" -அமித்ஷா அறிவிப்பு.. இரட்டை வேடம் என இணையவாசிகள் விமர்சனம்!
கடந்த ஆண்டு உத்தர பிரதேச மாநிலம், புந்தேல் கண்ட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, இலவத் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து இலவச திட்டங்கள் குறித்த விவாதங்கள் பொதுவெளியில் எழுந்தன.
மோடியின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், "பொதுமக்களுக்கான சமூக நலத்திட்டங்களை இலவசம் என்று ஒரு குறுகிய அடைப்புக்குள் அடக்கிடாமல், கிராமப்புற ஏழை எளிய மக்களிடையே நடைபெற்றுள்ள பொருளாதாரப் புரட்சி என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.
அதன்பின்னர் இலவசம் குறித்து ஆங்கில ஊடகத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்தது. அதைத் தொடர்ந்து இலவசம் தொடர்பான சர்ச்சை சில மாதங்கள் தொடர்ந்து நீடித்து வந்தது. ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் சட்டமன்ற தேர்தலில் பாஜக இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசியது.
இதுதொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் மற்றும் உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது திரிபுரா மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், அங்கு பாஜக சார்பில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, திரிபுராவில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கல்லூரி மாணவிகள் அனைவர்க்கும் இலவச ஸ்கூட்டி வழங்கப்படும் என அறிவித்தார்.
தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்கள் தருவது தவறு என்று இதே பாஜகதான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், ஆனால் தேர்தல் எங்கெல்லாம் நெருங்குகிறதோ அங்கெல்லாம் இலவசங்களை அறிவித்து மக்களை பாஜக தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் பாஜகவின் பச்சை இரட்டை வேடம் தொடர்ந்து வெளிவந்துகொண்டுள்ளது என இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தக கொள்முதலில் ஊழல்.. லஞ்ச ஒழிப்புத்துறையிடம் திமுக புகார் மனு!
-
‘இதுவா தூய சக்தி என மக்கள் தூ.. தூ.. என துப்புகிறார்கள்..!’ : திமுக கடும் விமர்சனம்!
-
கரூர் என்றால் ரூ 20 லட்சம் ; காசிமேடு மீனவர்களுக்கு ரூ.7 லட்சமா? த.வெ.க அரசே, இது என்ன நியாயம்..?
-
“மீனவர்களுக்கு தி.மு.க என்றும் துணை நிற்கும்!” - காசிமேடு பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேட்டி!
-
“இந்தியாவுக்கே பேரிழப்பு : குரியன் ஜோசப் குழு கலைப்பு” - த.வெ.க.வுக்கு சு.வெங்கடேசன் MP கண்டனம்!