Politics
டெல்லியை தொடர்ந்து இமாச்சலை கோட்டை விட்ட பாஜக.. 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்த காங்கிரஸ் !
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் சட்டமன்ற தேர்தல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இரு மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கப்போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், அதன் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.
குஜராத்தில் மொத்தம் 182 தொகுதிகளிலும் பாஜக - 156, காங்கிரஸ் - 17, ஆம் ஆத்மி - 5, மற்றவை 4 கைப்பற்றியுள்ளது. எனவே குஜராத்தில் பெரும்பான்மை வித்தியாசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
அதே போல், இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் 68 தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் - 40, பாஜக - 25, மற்றவை - 3 என பெற்று காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. தற்போது இமாச்சலில் காங்கிரஸ் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
பாஜக வசம் இருந்த இமாச்சல பிரதேசத்தை தற்போது காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றியுள்ளது. இமாச்சலை பொறுத்தமட்டில் காங்கிரஸ், பாஜக மட்டும் தான் கடந்த 1980-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை மாறி மாறி ஆட்சியமைத்து வருகின்றனர். ஆனால் இந்தாண்டும் மீண்டும் பாஜக ஆட்சியமைத்து விடுமோ என்ற சந்தேகத்திலே அனைவரும் இருந்த நிலையில், தற்போது அதனை முறியடித்து காங்கிரஸ் தட்டி தூக்கியுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற இம்மாநில சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 68 தொகுதிகளில் பாஜக 44 என்றும், காங்கிரஸ் 21 என்றும், சிபிஎம் 1 என்றும், மற்றவை 2 என்றும் வெற்றி பெற்று ஜெய் ராம் தாகூர் தலைமையிலான பாஜக ஆட்சியமைத்தது. இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் காங்கிரஸ் இமாச்சலை கைப்பற்றியுள்ளது. தற்போது இமாச்சலில் யார் தலைமையிலான ஆட்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இமாச்சல தேர்தலை பொறுத்த வரையில் காங்கிரஸ் தன்னால் முடிந்த அளவு கடுமையான பிரச்சாரம் மேற்கொண்டது. ஆனால் முன்னதாக உத்தர பிரதேசத்தில் பிரியங்கா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சாரம் பலனளிக்காமல் போனது. அதேபோல், இமாச்சலிலும் பிரியங்கா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சாரம் வேலை செய்யாதோ என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
ஆனால் அதற்கு மூக்கறுப்பு செய்வது போல், இமாச்சல் வெற்றிக்கு பிரியங்கா காந்தியும் முக்கிய பங்கு வகித்துள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் பாஜக பெரும்பாண்மை வெற்றி பெரும் என்று அனைவரும் அறிந்த ஒன்றே; ஆனால் இமாச்சலிலும், டெல்லி மாநகராட்சி தேர்தலிலும் பாஜக மண்ணை கவ்வியது யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாகவே அமைந்துள்ளது.
டெல்லி மாநகராட்சியில் 250 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி 127 இடமும், பாஜக 100 இடமும் பெற்று ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி மாநகராட்சியை பாஜக இழந்துள்ளது. தற்போது இமாச்சலிலும் அதே போல் இழந்துள்ளது. குஜராத் வெற்றியை பாஜக கொண்டாடினாலும் இந்த இரு தோல்விகளும் பாஜகவுக்கு பெரிய அடியே.
Also Read
-
“ஒருவேளை விஜய் வட இந்தியாவில் பிறந்திருந்தால்...” - கழக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தாக்கு!
-
முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!