Politics
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்ஜிக்கும் போது மியாவ் என கத்தும் பூனைதான் தமிழக பாஜக - சு.சாமி தாக்கு !
மத்தியில் பாஜக ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து ஆட்சியை கைப்பற்றி வருகிறது. இதில் தேர்தலில் வென்று ஆட்சியமைத்ததை விட எம்.எல்.ஏக்களை வாங்கி ஆட்சி அமைந்ததுதான் அதிகம் என்பது மறுக்கமுடியாத உண்மை.
ஆனால், அத்தகைய பாஜகவால் சீண்ட முடியாத மாநிலம் என்றால் அது தமிழ்நாடுதான். தமிழிசை வரை தற்போது அண்ணாமலை வரை பாஜக தமிழ்நாட்டில் தலைகீழாக நின்றாலும் கூட முன்னேற் முடியாமல் தவித்த வருகிறது. அதோடு கட்சியை வளர்க்க ரவுடிகள் முதற்கொண்டு கட்சியில் பாஜக சேர்த்து வருகிறது.
இது தவிர சினிமா பிரபலம், யூடியூப் பிரபலம் என் கிடைத்தவரை எல்லாம் பாஜக கட்சியில் சேர்ந்து வருகிறது. ஆனாலும், பாஜகவால் தமிழ்நாட்டில் கொஞ்சம் கூட வளரமுடியாத நிலையே இருந்துவருகிறது. அதிலும் கட்சியில் சேர்வர்கள் செய்யும் செயல்கள் மற்றும் ஆடியோக்கள் எல்லாம் அந்த கட்சிக்கு நாள்தோறும் தர்மசங்கடத்தையே ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் பாஜக வளந்ந்து விட்டதாகவும், திமுக -பாஜக மோதல்தான் என பாஜக தலைவர்கள் பேசுவது அந்த கட்சி தொண்டர்களுக்கே சிரிப்பை வரவழைக்கும் விதமாகதான் பார்க்கப்படுகிறது. இது தவிர அந்த கட்சியை சேர்ந்தவர்களே அக்கட்சியை விமர்சிப்பதும் தொடர்ந்து நடந்துவருகிறது. அந்த வகையில் பாஜக சுப்பிரமணியன் சாமி தமிழக பாஜகவை பங்கமாக கிண்டல் செய்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் அதில், தமிழ்நாட்டில் நான் மட்டும் தான் திமுகவை எதிர்க்கிறேன். முதல்வர் மு.க. ஸ்டாலின் கர்ஜிக்கும் போது மியாவ் எனச்சொல்லும் பூனைகள் போலத் தமிழ்நாடு பாஜக இருக்கிறது. சினிமா கலாச்சாரம் தமிழக பாஜகவை கெடுத்துவிட்டது" எனக் கூறியுள்ளார்.
Also Read
-
“அதிமுகவை அழிக்க வேறு யாரும் தேவையில்லை.. இவரே போதும்..” எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த கருணாஸ்!
-
Fact Check : வள்ளுவருக்கு விபூதி... மீண்டும் மீண்டும்.. பொய் பரப்புவதில் பாஜகவுடன் போட்டிபோடும் அதிமுக!
-
"அரசியல் சண்டைகளுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்" - பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை !
-
ஆதாரை வாக்காளர் பட்டியலுக்கான ஆவணமாக ஏற்கவேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
”அ.தி.மு.க-விற்கு விரைவில் ICUதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!