Politics
RSS அமைப்பின் தலைமை அமைந்துள்ள நாக்பூரில் வெற்றிக் கொடியேற்றிய காங்கிரஸ்.. பா.ஜ.க படுதோல்வி !
மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவை சேர்ந்தவர் முதல்வராக இருக்க ஒப்புதல் கொடுத்தால் பா.ஜ.கவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தயார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
ஆனால் இதற்கு உடன்படாத பா.ஜ.க தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது.அதைத் தொடர்ந்து பா.ஜ.க சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றார்.ஆனால் இந்த அரசு சில நாட்களில் கவிழ்ந்தது. அதன்பின்னர் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி வைத்த நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.
சுமார் 3 ஆண்டுகள் நீடித்த இந்த அரசு சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் மூலம் கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பா.ஜ.க ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். துணை முதல்வர் பதவி பா.ஜ.கவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்து இருக்கும் நாக்பூர் மாவட்டத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இந்தியாவை ஆட்சி புரியும் கட்சியின் தாய் அமைப்பு இருக்கும் இடம் என்பதால் இங்கு வெற்றிபெற பாஜக எப்போதுமே கடுமையாக முயற்சி செய்யும்.
ஆனால், அனைவர்க்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் இந்த பஞ்சாயத்து தேர்தலில் அபார வெற்றிபெற்றுள்ளது. 13 பஞ்சாயத்து தலைவர் இடங்களில் 9 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்ற நிலையில், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 3 பஞ்சாயத்தை தலைவர் இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மஹாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்து பாஜக, ஏக்நாத் ஷிண்டே ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், ஆளும் கூட்டணி ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்து இருக்கும் நாக்பூரில் தோல்வியடைந்துள்ளது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டின் நிதிப் பொறுப்பும் பட்ஜெட் மேலாண்மையும் கட்டமைப்பிற்குள் உள்ளது” : இந்து நாளேடு பாராட்டு!
-
தஞ்சையில் அடுத்த மகளிர் அணி மாநாடு! - தயாராகும் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” : முழு விவரம் உள்ளே!
-
“மதவாத அரசியல் போதையை தடுத்திட நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும்!” : திருச்சியில் முதலமைச்சர் பேச்சு!
-
தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு 21 லட்சம் வாகனங்கள் பதிவு : கடந்த ஆண்டை விட 8.4% வாகனங்கள் விற்பனை!
-
2025 ஆம் ஆண்டில் 2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!