Politics
12 மாநிலங்கள்.. 150 நாள் பாதயாத்திரை.. 60 கேரவன்கள்.. ராகுல் காந்தியின் தேச ஒற்றுமை பயண விவரங்கள் என்ன ?
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'தேச ஒற்றுமை பயணம்' பாதயாத்திரையை 150 நாட்கள் 12 மாநிலங்களில் மேற்கொள்ள உள்ளார். இதற்கான தொடக்க விழா வரும் 7-ம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் 150 நாள் பாதயாத்திரை குறித்த அட்டவணை வெளிவந்துள்ளது. அதன்படி 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கவிருக்கும் பாதயாத்திரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை அவரிடம் வழங்கி தொடங்கி வைக்கிறார்.
அன்று மாலையே சுமார் 3½ கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தியுடன் டெல்லியில் இருந்து 100 நிர்வாகிகள், தமிழகத்தில் இருந்து 300 நிர்வாகிகள் என மொத்தம் 400 நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். ராகுல் காந்திக்காக படுக்கையறை, சமையலறை வசதியுடன் 60 கேரவன்கள் கன்னியாகுமரிக்கு வந்துள்ளன.
குமரி மாவட்டத்தில் ராகுல் காந்தி ஒரு லட்சம் பேரை சந்திக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. குமரியில் பாதயாத்திரை முடித்துவிட்டு கேரளா செல்கிறார். அங்கு 7 மாவட்டங்களில் 19 நாட்கள் 450 கிமீ தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார். ராகுல் காந்தியின் 150 நாள் பாதயாத்திரை பயணத்தில் 1 கோடி மக்களை சந்திக்க திட்டம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!