Politics
"ராஜா தனது நண்பர்கள் சம்பாதிக்க ஓய்வில்லாமல் உழைக்கிறார்" - மோடியை காட்டமாக விமர்சித்த ராகுல் காந்தி !
மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே வேலையின்மை அதிகரித்துள்ளது. அதேபோல் பொருளாதாரமும் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. மக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்பட்டு வரும் வேலைலும் பெட்ரோல், டீசல், சிலிண்டர் போன்ற வற்றின் விலைகளை ஒன்றிய அரசு தொடர்ச்சியாக உயர்த்தி வருகிறது.
இது தவிர நாட்டின் வளங்களை தனியாருக்கு ஒன்றிய அரசு விற்பனை செய்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் தனியார்கள் வளர்ந்து மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் ஹிந்தியில் பதிவு செய்த டிவிட்டில், "ராஜா தனது நண்பர்களுக்கு சம்பாதித்து தருவதற்காக ஓய்வில்லாமல் உழைக்கிறார். மக்களோ விலைவாசி உயர்வால் தவிக்கிறார்கள். இன்றெல்லாம் ஒரு பொருளை வாங்குவதற்க்கு முன் 10 முறை மக்கள் யோசிக்க வேண்டியுள்ளது. இந்த பிரச்னைக்கு முக்கிய காரணம் பிரதமர் மோடிதான். நம் குரல் ராஜாவுக்கு எட்டும் வரை விலைவாசி உயர்வுக்கு எதிராக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம் " என்று கூறியுள்ளார்.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கிமீ பயணத்தை ராகுல் காந்தி செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்குகிறார். இதற்கான ஏற்பாட்டில் காங்கிரஸ் கட்சி தீவிரமான பணியாற்றி வருகிறது. இந்த நிலையில் அதன் முன்னோட்டமாக இதுபோன்ற விமர்சனத்தை ராகுல் காந்தி முன்வைத்துள்ளார்.
Also Read
-
“தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் விவரம் என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!
-
"மோடியின் அமைச்சரவையில் 39 % பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள்" : அமித்ஷாவுக்கு ஆ.ராசா MP பதிலடி !
-
நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்காக... இழப்பீடு தொகையை அதிகரித்த தமிழ்நாடு அரசு : முழு விவரம் உள்ளே !
-
ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 66 புதிய பள்ளிக் கட்டடங்கள் - 818 பேருக்கு பணி நியமனம் : முழு விவரம் உள்ளே!
-
மக்கள் நல்வாழ்வுத் துறையில் 644 பேருக்கு பணி நியமனம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!