Politics
“தேசபக்தியை ஒருபோதும் விற்க முடியாது” : ரேஷன் கடைகளில் தேசியக்கொடி விற்பனையால் கொந்தளித்த ராகுல் காந்தி!
பா.ஜ.க ஆளும் ஹரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தில் உள்ள ஹெம்டா என்ற கிராமத்தில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் பணிபுரிந்து வரும் ஊழியர் ஒருவர், ரேஷன் பொருட்களை வாங்க வருவோரிடம், 20 ரூபாய் மதிப்புள்ள தேசியக் கொடி ஒன்றையும் வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதனை அறிந்த மாவட்ட நிர்வாகம், அந்த ரேஷன் கடையின் உரிமத்தை ரத்து செய்துள்ளது. மேலும், அந்த கடையின் ஊழியரையும் கைது செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த கடையின் ஊழியர், நாங்கள் வேண்டும் என்றே தேசியக் கொடியை விற்பனை செய்யவில்லை.
மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியதை தான் செய்துள்ளோம் என்று கூறியுள்ளார். அதாவது, தேசியக் கொடியை கட்டாயப்படுத்தி விற்பனை செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தான் கூறியது என அந்த ஊழியர் தெரிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகமே விற்பனை செய்ய சொல்லிவிட்டு, பிரச்சனை வந்தவுடன், ஊழியர்களின் மீது பழிபோட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மூவர்ணக்கொடி என்பது நமது நாட்டின் கவுரவம். பெருமை. இது இந்தியர்கள் அனைவரின் மனதிலும் இருக்கும். தேச பக்தியை ஒருபோதும் விற்க முடியாது. ரேஷனில் ஏழைகள் பொருட்கள் வாங்க வரும்போது அவர்களிடம் கட்டாயமாக 20ரூபாய் பெற்றுக்கொண்டு தேசியக் கொடியை விற்பது வெட்கக்கேடானது” என சாடியுள்ளார்.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!