Politics
”பெஸ்ட் புதுச்சேரியா? அதுலா மறந்துட்டாங்க..” - பிரஸ் மீட்டில் உளறிய எல்.முருகன்..
புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரத்தின் போது புதுச்சேரிக்கு வந்த பிரதமர் மோடி, புதுச்சேரியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றுவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு சென்றார். ஆனால் தற்போது பிரதமர் மோடி கூறியதுபோல் புதுச்சேரியில் எவ்வித வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை.
அண்மையில் புதுச்சேரி வந்திருந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேர்தல் நேரத்தில் பிரதமர் கூறியவாறு 'பெஸ்ட் புதுச்சேரியை உருவாக்கிவிட்டுதான் அடுத்தமுறை தேர்தலுக்கு உங்களை சந்திக்க வருவோம் என அவரும் கூறிவிட்டுச் சென்றார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் புதுச்சேரி பா.ஜ.க அலுவலகத்திற்கு வந்திருந்த ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகனிடம், தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றுவோம் என கூறிய வாக்குறுதி எந்த நிலையில் உள்ளது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, பெஸ்ட் புதுச்சேரி என்று சொன்னவர்கள் அதை மறந்துவிட்டு சென்றுவிட்டார்கள் என பதிலளித்தார்.
எல்.முருகனின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணியில் ஆட்சி புரிந்து வரும் பா.ஜ.கவின் ஒன்றிய இணை அமைச்சரே இப்படி கூறியிருப்பது, புதுச்சேரி மக்கள் மீதான அவர்களின் அக்கறை இவ்வளவுதான் என்று விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
இதுபோக, என்.ஆர்.காங்கிரஸ் உடனான கூட்டணியில் விரிசல் விழுந்துவிட்டதால் எல்.முருகன் இப்படி கூறினாரா அல்லது கூட்டணி ஆட்சிதான் புதுச்சேரியில் நடக்கிறது என்பதை கூட அறிந்திடாமல்தான் ஒன்றிய அரசின் இணை அமைச்சராக எல்.முருகன் இருக்கிறாரா எனவும் கேள்வி எழுந்து வருகிறது.
முன்னதாக பிரதமர் மோடி அறிவித்த பெஸ்ட் புதுச்சேரி என்ற திட்டத்தை கூட இணையமைச்சராக இருக்கக் கூடிய எல்.முருகன் நினைவில் வைத்திருக்கவில்லை என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!