Politics
கொடநாடு விவகாரம்: தினேஷ் மரண விசாரணையில் அவிழப்போகும் மர்ம முடிச்சுகள் என்ன? பரபர தகவல்கள்!
கொடநாடு எஸ்டேட்டில் பணிபுரிந்த கணினி பொறியாளர் தினேஷ் தற்கொலை விவகாரம் குறித்து தனிப்படை போலிஸார் தொடர்ந்து பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று, தினேஷின் சகோதரி ராதிகா, தினேஷின் தாயார் கண்ணகி ஆகியோரிடம் இரண்டாவது முறையாக விசாரணை நடத்தினர்.
மேலும், தினேஷ் உயிரிழந்தது தற்கொலை என்றும், கண்பார்வை கோளாறு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் பதிவு செய்து, வாக்குமூலத்தை காவல்துறையினரே எழுதி தினேஷ் தந்தை போஜனிடம் கையெழுத்துப் பெற்ற சோலூர் மட்டம் உதவி ஆய்வாளர் ராஜனிடமும் தனிப்படை போலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
அதேபோல, கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் தினேஷ் தற்கொலை குறித்து மீண்டும் விசாரணை நடத்த தனிப்படை போலிஸார் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினேஷ் தற்கொலையில் பல மர்மங்கள் நிறைந்த இருப்பதாகவும் தற்போது தனிப்படை போலிஸார் நடத்தி வரும் விசாரணையில் அந்த மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்பட்டு பல உண்மைகள் கண்டறியப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் கொடநாடு எஸ்டேட்டில் பணிபுரியும் சில ஊழியர்களிடமும் தினேஷ் தற்கொலை குறித்த விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !