Politics
கொடநாடு மர்மம்: நுணுக்கமான விசாரணையை தொடங்கிய தனிப்படை; விஸ்வரூபம் எடுக்கும் தினேஷ் மரணம்!
கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை சம்பவம் குறித்து மறு புலன் விசாரணை உதகை பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டு புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் 10 பேரில் சயான், ஜம்சீர் அலி, சதீசன், பிஜின் குட்டி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி ஆகிய 6 நபர்களிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொலை கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் நபர்களின் உறவினர்கள், சகோதரர்கள், நண்பர்களே என 40க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் காவல்துறையினர் மறு புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கணினி ஆப்ரேட்டராக பணிபுரிந்த தினேஷ் குமாரின் தற்கொலை வழக்கு குறித்து கடந்த மாதம் செப்டம்பர் 21-ஆம் தேதி கோத்தகிரியில் தினேஷ்குமார் குடும்பத்தினர் வசிக்கும் கெங்கரை கிராமத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரசேகர், சோலூர்மட்டம் காவல் ஆய்வாளர் வேல் முருகன் ஆகியோர் விசாரணை நடத்தினார்.
இதில் தினேஷ் குமாரின் தந்தை போஜராஜன், சகோதரி ராதிகா, தாயார் கண்ணகி ஆகியோரிடம் தனிப்படை போலிஸார் தினேஷ் தற்கொலை குறித்து பல கோணங்களில் விசாரணை நடத்தினார். இதனைத்தொடர்ந்து கோடநாடு எஸ்டேட் பங்களாவில் தினேஷ் குமாருடன் பணிபுரிந்த மற்ற பணியாளர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து இன்று உதகை பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இக்கொலை, கொள்ளை வழக்கை அதிமுக ஆட்சியில் விசாரணை நடத்தி வந்த, அப்போதைய சோலூர்மட்டம் உதவி ஆய்வாளர் ராஜனிடம் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோடநாடு கணினிப் பொறியாளர் தினேஷ் தற்கொலை குறித்து விசாரணை நடத்தும் மற்றொரு தனிப்படை போலிஸார் இன்று பிற்பகல் கொங்கரை கிராமத்தில் உள்ள தினேஷின் வீட்டிற்கு சென்ற, தினேஷின் சகோதரி ராதிகா மற்றும் அவரது தாயார் கண்ணகி ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினேஷ் தற்கொலை விவகாரத்தில் கொடநாடு எஸ்டேட்டில் பணிபுரியும் ஊழியர்கள், மின்வாரிய அதிகாரிகள் செல்போன் டவர் மூலம் கிடைத்த பல தொழில்நுட்ப சாட்சிகளை உட்படுத்தி தற்கொலை செய்துகொண்ட தினேஷின் சகோதரி ராதிகா மற்றும் அவரது தாயார் கண்ணகியிடம் தனிப்படை போலிஸார்பல்வேறு நுணுக்கமான கேள்விகளைக் கேட்டு வருகின்றனர். இதனால் தினேஷ் தற்கொலை வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!