Politics

’இப்போதான் நான் ஜெ.,வாக உணர்கிறேன்’ -காலில் விழுந்த ராஜேந்திர பாலாஜி; சிரித்தபடியே ஏற்ற எடப்பாடி பழனிசாமி

விருதுநகர் சாத்தூர் வழியாக உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்துக்காக தென்காசிக்கு சென்றுக் கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமிக்கு வெங்கடாசலபுரம் நெடுஞ்சாலையில் ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்களால் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுமட்டுமல்லாமல், எடப்பாடி பழனிசாமியுடன் வந்த ராஜேந்திர பாலாஜி காரை விட்டு இறங்கி இ.பி.எஸுக்கு மாலை அணிவித்து பரிவட்டம் சூட்டியதோடு நடு ரோட்டில், அவரது காலில் விழுந்து மரியாதை செலுத்தினார்.

அவரை தொடர்ந்து பிற அதிமுகவினர்களும் எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்தனர். அதிமுக என்றாலே தன்மானத்தை விட்டு கட்சித் தலைமை அல்லது எஜமானர்களின் காலில் விழுந்துக் கிடப்பவர்கள் என்ற வழக்கே உள்ளது.

அது ஜெயலலிதா, சசிகலா காலத்துக்கு பிறகு தற்போது எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்கிறது. கட்சியை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என டெல்லி எஜமானர்களின் காலில் ஓபிஎஸும், இபிஎஸும் விழுந்துக் கிடக்கிறார்கள்.

அதேபோல, மாவட்ட அளவிலான பொறுப்பையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ஆக்டிங் தலைமையாக இருக்கக் கூடிய எடப்பாடி பழனிசாமிக்கு ராஜேந்திர பாலாஜி காக்கா பிடித்துக் கொண்டிருக்கிறார் என விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Also Read: EPS போனதும் நடு ரோட்டில் முட்டி மோதிய அதிமுகவினர்; உச்சத்தில் உட்கட்சி பூசல்; சாத்தூரில் பரபரப்பு!