Politics
கொடநாடு கொலை, கொள்ளை: கூடுதல் விசாரணைக்கு தடையில்லை - EPS & Co-க்கு இறுகும் பிடி!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையின் கூடுதல் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
இதனை எதிர்த்து கொடநாடு வழக்கு காவல்துறை சாட்சியாக அப்போது சேர்க்கப்பட்டிருந்த அனுபவ் ரவி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், தற்போதைய நிலையில் வழக்கு விசாரணையில் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மாஜிஸ்ரேட் நீதிமன்றம் வழக்கின் அனைத்து அமசங்களையும் கருத்தில் கொண்டே கூடுதல் விசராணைக்கு அனுமதி வழங்கியிருப்பதால் மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Also Read
-
வெளியான அதிர்ச்சி காணொளி.. தவெக அரசின் அலட்சியம்.. நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை பிடித்து சிகிச்சை!
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொடூர கொலை.. பின்னணி என்ன?
-
Part Time Job : விளம்பர பதாகை வைத்த நந்தனம் கல்லூரி மாணவருக்கு நேரந்த சோகம்!