Politics
இரவோடு இரவாக பெரியார் ஈவெரா சாலை என பெயர் மாற்றம்: வலுக்கும் திமுக உள்ளிட்ட கட்சியினரின் கண்டனக் குரல்!
சென்னை- பூந்தமல்லியை இணைக்கும் ஈ.வெ.ரா பெரியார் சாலை கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு என பெயர் மாற்றப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆனது.
ஆங்கிலேயர்கள் காலத்தில் சென்னை ஜீரோ பாயிண்டிற்கும் பூந்தமல்லிக்கும் இடையே சாலை உருவாக்கப்பட்டு அதற்கு கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு என பெயரிடப்பட்டது. இந்த நிலையில் 1979-ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடிய அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அந்த சாலைக்கு ஈ.வெ.ரா பெரியார் சாலை என பெயர் மாற்றம் செய்தார்.
இந்த நிலையில் எம்.ஜி.ஆர் வைத்த பெயருக்கு பதிலாக மீண்டும் ஆங்கிலேயர்கள் வைத்த கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு என்ற பெயர் வைக்கப்பட்டதற்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டன அறிக்கையை விடுத்த நிலையில் திராவிடர் விடுதலை கழகத்தினர் நெடுஞ்சாலை துறையால் வைக்கப்பட்ட பெயர் பலகையில் கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோட் என்ற பெயரை மட்டும் கருப்பு மை பூசி அழித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
பெயர் பலகை விவகாரத்தில் மவுனம் காத்து வந்த தமிழக அரசு இதுவரை எவ்வித பதிலும் அளிக்காமல் பொறுமையாக இருந்து வருகிறது. இப்படி இருக்கையில் நேற்று இரவு த.பெ.தி.கவினர் கிராண்ட் டிரங்க் ரோடு என்ற பெயரை மறைத்து ஈவெரா பெரியார் சாலை என்ற பெயரில் மீண்டும் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம் என்பது ஒரு திட்டமிட்டச் செயல்!”: மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!
-
“மரியாதையும், பாதுகாப்பான கல்விச்சூழலும் கிடைப்பது குழந்தைகளின் உரிமை!” : கனிமொழி எம்.பி!
-
கிரிக்கெட் விளையாட்டு : பந்து தலையில் தாக்கி 11 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம் - காஞ்சியில் அதிர்ச்சி!
-
கிராண்ட் ஸ்லாம் ஓபன் டென்னிஸ் இன்று தொடங்குகிறது.. கோடிகளில் பரிசுத் தொகை.. களமிறங்கும் முன்னணி வீரர்கள்!
-
திமுக தலைவருக்கான பாதுகாப்பு குறைப்பு.. தவெக அரசின் அரசியல் உள்நோக்கமா? : தலைவர்கள் கடும் கண்டனம்!