Politics
“கடிதம் மூலம் தமிழகத்தில் மீண்டும் இந்தி திணிப்பு” : மொழி விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் மோடி அரசு !
பா.ஜ.க அரசு நாடு முழுவதும் புதிய தேசிய கல்விக் கொள்கை உள்பட அரசின் அறிவிப்புகள் ஒவ்வொன்றிலும் இந்தி மொழித் திணிப்பை கையாண்டு வருகிறது. அரசு அலுவலர்கள் மத்தியில், இந்தி பேசும் மாநிலத்தவர்களே இந்தியர்கள் என்கிற தவறான பிம்பத்தை பா.ஜ.க திட்டமிட்ட உருவாகி வருகிறது.
அரசு நிகழ்ச்சி மற்றும் அறிவிப்பு தொடர்பாக வெளியிடப்பட்டும் கடிதங்களை இந்தியிலேயே வெளியிட்டு மொழித் திணிப்பை தொடர்ந்து செய்துவருகிறது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், தனது இந்தி திணிப்பு போக்கை நிறுத்திக்கொள்ளதா மோடி அரசு, மீண்டும் கடிதம் ஒன்றிற்கு இந்தியில் பதில் எழுதியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி வழக்கறிஞர் குமாரதேவன் மத்திய அரசின் சுகாதாரத் துறையின் ஆயுஷ் துறைக்கு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில், “சித்தா ,ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட துறைகளுக்கு 2014 யில் இருந்து 2021 ஆண்டு வரை எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது” என ஆங்கிலத்தில் கடிதம் எழுதினார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அக்கடிதத்திற்கு பதிலுரையை மத்திய அரசின் ஆயுஷ் துறை முழுக்க முழுக்க இந்தியில் பதில் அளித்துள்ளது. குறிப்பாக, கடிதத்தின் உரை முதல் உள்ளிருக்கும் கடிதத்தின் தலையிலிருந்து கால் வரை முழுவதுமாக இந்தியில் எழுதக இருப்பதாக வழக்கறிஞர் குமாரதேவன் தெரிவித்துள்ளார்.
மோடி அரசு பக்கம் திருக்குறள் சொல்வது மறுபுறம் தமிழகத்தில் இந்தி திணிப்பது என இரட்டை வேடம் போடுவது இன்று வெட்ட வெளிச்சமாகி விட்டது.
மேலும் இந்தி திணிப்பு அனைத்து துறையிலும் இருக்கிறது என்பதை தற்போது இக்கடிதம் காட்டியுள்ளது. இது வண்மையாக கண்டிக்கதக்கது என்றும் மீண்டும் ஆயூஷ் துறைக்கு தமிழில் கடிதம் எழுதப்போவதாக வழக்கறிஞர் குமாரதேவன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
இவ்வளவு கொடூரமான ஒரு மனிதனுக்கு எப்படி ஜாமீன் கிடைக்கும்? : சுப்ரியா சுலே MP கேள்வி!
-
“எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகள்..”: கிறிஸ்தவர்களை தாக்கும் இந்துத்வ கும்பல் - முதலமைச்சர் கண்டனம்!
-
கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கும் இந்துத்துவ கும்பல் : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!
-
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை: 2 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு.. திறந்து வைக்கப்படும் திட்டங்கள்? விவரம்