Politics

5 முறை குண்டர் சட்டத்தில் கைதானவருக்கு பா.ஜ.கவில் மாவட்ட இளைஞரணி பதவி!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏராளமான காவல்நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக பிரபல ரவுடி முரளி என்கிற முரளிதரனுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இளைஞரணியில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

2021ம் ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு யாராக இருந்தாலும் பராவாயில்லை என தனது கட்சி பக்கம் இழுத்து எப்படியாவது டெபாசிட்டையாவது பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் பாஜக சற்று தீவிரமான மனநிலையில் செயல்பட்டு வருகிறது.

அவ்வகையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது கட்டுக்கட்டாக செல்லாத ரூபாய் நோட்டுகளுடன் வசமாக சிக்கிய பாஜகவைச் சேர்ந்த அருண் அந்த சமயத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

தற்போது, அதே கட்சியில் மாநில இளைஞரணி செயலாளராக அண்மையில் பதவியேற்றுள்ளார். அதேபோல, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ரவுடி முரளி பல்வேறு கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்களை புரிந்து 5 முறை குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டவர்.

அந்த ரவுடிக்கு தற்போது சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணியில் பதவி வழங்கியுள்ளது தமிழக பாஜக. இந்த பதவி வழங்கல் நிகழ்வு அக்கட்சி உறுப்பினர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதோடு, ரவுடி முரளிக்கு கட்சி பதவி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு ரவுடிகள், மோசடி பேர்வழிகளை கட்சியில் இணைத்து மக்களிடையே தன் செல்வாக்கை வெளிப்படுத்திக் கொள்ளவே இவ்வாறான இழி செயல்களில் ஈடுபட்டு தன் கட்சி உறுப்பினர்களிடையேவும் தமிழக பாஜக கெட்ட பெயர்களை ஈட்டி வருகிறது.

Also Read: பண மதிப்பிழப்பின் போது கோடிக்கணக்கில் மோசடி செய்து போலிஸில் சிக்கியவருக்கு தமிழக பா.ஜ.க இளைஞர் அணி பதவி!