Politics
“ஒரே நாடு ஒரே மொழி” என்பது தேசத்துக்கு கேடு விளைவிக்கும் - கே.எஸ்.அழகிரி பேச்சு!
காங்கிரஸ் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.
அப்போது, “5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் எனக் கூறியிருப்பது சமூக நீதிக்கு எதிரானது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பற்றி தொலைக்காட்சி நேர்காணலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரக்குறைவாகப் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. அமைச்சருக்கான தகுதி ராஜேந்திர பாலாஜியிடம் இருக்கவேண்டும்.
அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சி பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
மேலும், “ஒரே நாடு, ஒரே மொழி என்பது தேசத்துக்கு கெடுதல் விளைவிப்பதாக இருக்கிறது. இந்தி பரவலாக பேசக்கூடிய மொழியே தவிர எல்லோராலும் பேசப்படும் மொழி அல்ல.
வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவில் அரசியல் சாசனத்துக்கு எதிராக அமித்ஷா பேசி இருக்கிறார். காங்கிரஸை வீழ்த்தவேண்டும் என்பதற்காகவே ப.சிதம்பரத்தை பா.ஜ.க கைது செய்துள்ளது. சிறைவாசத்தைக் கண்டு காங்கிரஸ் ஒருபோதும் அஞ்சாது” என கே.எஸ்.அழகிரி பேசியுள்ளார்.
Also Read
-
“பதவியைக் காக்க பா.ஜ.க.வின் பாதம் தாங்கியாக மாறியவர்தான் பழனிசாமி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
“வீடியோலாம் எடுக்க கூடாது...” - தேர்தல் அலுவலரை தடுத்த தஞ்சை பாஜக நிர்வாகி... அதிரடி காட்டிய போலீஸ்!
-
“நாங்கள் கொள்கையில் நீடித்து வருகிறோம்...” - CPIM மாநில செயலாளர் சண்முகம் அதிரடி!
-
5 மாநில தேர்தல் முடிந்தவுடன் இது நடக்கும் : பா.ஜ.க அரசின் திட்டம் - ராகுல் காந்தி எச்சரிக்கை!
-
பா.ஜ.க ஆளும் அரியானாவில் 3 வயது சிறுமி வன்கொடுமை : உச்சநீதிமன்றம் தலையிட்ட பின் குற்றவாளிகள் கைது!