Politics
லண்டனில் முதலமைச்சருக்கு எதிர்ப்பு காட்டிய பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தினர் - அப்செட்டில் எடப்பாடி
அரசு முறை பயணமாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுக்கு பயணத்தை தொடங்கியுள்ளார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இந்தப் பயணத்தில் முதல்வருடன் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், முதல்வரின் செயலாளர்கள் விஜயகுமார், சாய்குமார் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு செல்வதாகவும், அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
சென்னையிலிருந்து நேற்று விமானம் மூலம் லண்டன் சென்ற முதல்வருக்கு அந்நாட்டு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
முதல்வர் வருகை தந்த அதே நேரத்தில் லண்டன் விமான நிலையத்தில் புதிய கல்வி கொள்கை மற்றும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கைகளில் பதாகைகளை ஏந்தி பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் முதல்வர் மற்றும் அமைச்சர்களும் மாற்று வழியில் அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டில் காட்டப்பட்ட இந்த எதிர்ப்பு, அவமானகரமாகவே பார்க்கிறாராம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
Also Read
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
’உங்களுடன் ஸ்டாலின்’ - மக்களுக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சென்னையில் இன்று மழை பெய்யுமா? : வானிலை நிலவரம் என்ன?
-
“வட சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க குடிசைகள் இருக்கக் கூடாது!” : துணை முதலமைச்சர் சூளுரை!