Politics
“உங்களைப் போன்றவர்கள் இருந்த காங்கிரஸ் எப்படி உருப்படும்?” - ஜி.கே.வாசனுக்கு ஆளூர் ஷா நவாஸ் கேள்வி!
திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு பேசுகையில், “பிரதமர் கனவு கண்ட பல தலைவர்கள், முன்னாள் தலைவர்களுடைய வாரிசுகளெல்லாம் இன்றைக்கு விலாசம் தெரியாமல் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியினுடைய இன்றைய நிலை என்ன? எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெறமுடியாத பரிதாபகரமான நிலையில் காங்கிரஸ் கட்சி இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” எனக் கூறினார்.
ஜி.கே.வாசனின் இந்தப் பேச்சு காங்கிரஸ் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியது. மிகநீண்ட காங்கிரஸ் பாரம்பரியம் கொண்ட ஜி.கே.வாசன் காங்கிரஸை மிகக் கடுமையாக விமர்சித்திருப்பது கண்டனத்திற்குள்ளாகி வருகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர் மூப்பனாரின் வாரிசான ஜி.கே.வாசன், கட்சியிலும், காங்கிரஸ் ஆட்சியிலும் மிக முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். காங்கிரஸ் தலைமையுடனான கருத்து வேறுபாட்டால் பிரிந்த அவர், கொள்கை எதிரியான பா.ஜ.க-வுடன் தேர்தல் கூட்டணி வைத்ததோடு அல்லாமல், காங்கிரஸின் தோல்வியை கடுமையாக விமர்சித்திருப்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், வி.சி.க-வைச் சேர்ந்த ஆளூர் ஷாநவாஸ், ஜி.கே.வாசன் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ளார். அவர், “பா.ஜ.கவுடன் கைகோர்த்து பயணிக்கும் நீங்கள், காங்கிரசின் முக்கிய தலைவராகவே இருந்திருக்கும்போது, இப்போதும் பலர் காங்கிரசில் அவ்வாறு பதுங்கி இருக்கும்போது, அக்கட்சி எப்படி உருப்பட முடியும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!