Politics
பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்தக் கோரி வி.சி.க தலைவர் திருமாவளவன் மனு!
பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்துவது தொடர்பாக தேர்தல் அதிகாரியை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பொன்பரப்பியில் வாக்குப்பதிவு நாளன்று தலித் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் தலித் மக்கள் குடியிருக்கும் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த பானைகள் உடைக்கப்பட்டன என்று கூறினார். மேலும் தாக்குதல் காரணமாக தலித் மக்களால் முழுமையாக வாக்களிக்க முடியவில்லை என்று கூறினார்.
முன்னதாக, பொன்பரப்பி வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தலைமை தேர்தல் அதிகாரியை அணுகும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!