Politics
அரசு துறைகளில் உள்ள 22 லட்சம் காலி பணியிடம் ஓராண்டில் நிரப்பப்படும்! ராகுல் காந்தி உறுதி
உத்திரப்பிரதேசத்தில் லக்மிபூர் கோரி பகுதியில் நேற்று முன்தினம் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் பேசியதாவது;
கடந்த 2014ம் ஆண்டு ' நல்ல நாட்கள் வரும்' என பிரதமர் மோடி பல பொய் வாக்குறுதிகளை அளித்தார். 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு. ஒவ்வாருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என அவர் அளித்த வாக்குறுதிகள் எதுவும் உணமையாகவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் இந்த காவலாளி, 15 தொழிலதிபர்களை மட்டும் தான் பாதுகாத்தார். விமானமே தயாரிக்காத அணில் அம்பானி நிறுவனத்திற்கு ரஃபேல் விமானத்தை கூட்டாக தயாரிக்க ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பில் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயத்தால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது என்கின்றனர்.
ஏழைகளுக்கு குறைந்த வருமானம் கிடைக்க காங்கிரஸ் 'நியாய்' திட்டம் கொண்டுவருகிறது. பொருளாதார நிபுணர்கள் மற்றும் சிந்தனையாளர்களுடன் ஆயோசித்துதான் இந்த திட்டம் கொண்டுவரப்படுகிறது. அனில் அம்பானி, விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக் ஷி போன்றவர்களின் கோடிக்கணக்கான கணக்குகள் தள்ளுபடி செய்யும்போது, 5 கோடி குடும்பங்களின் நலனுக்காக ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் அரசால் வழங்க முடியும். விவசாயிகளுக்கான தனி பட்ஜெட் தாக்குதல் செய்யப்படும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு துறையில் உள்ள 22 லட்சம் காலி பணியிடங்கள் ஓராண்டில் நிரப்பப்படும். அதோடு பஞ்சாயத்து அமைப்புகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!