Politics
இரட்டை வேடம் போடுவதையே பாஜக வாடிக்கையாக வைத்துள்ளது - காங்கிரஸ் கட்சி செயலாளர் சஞ்சய் தத்
பெங்களூரில் இருந்து புதுச்சேரி நிகழ்வுகளில் பங்கேற்க காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் இன்று புதுச்சேரி விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்திக்கையில், இந்த தேர்தலில் காங் கூட்டனி அமோக வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராவது உறுதி. புதுச்சேரி, தமிழகத்திலும் 40க்கு 40 திமுக, காங் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்றும் சஞ்சய் தத் தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், ஒவ்வொரு வங்கி கணக்குக்கு 15 லட்ச ருபாய் பணம் செலுத்துவதாகி பொய் வாக்குறுதி கூறி நாட்டு மக்களை ஏமாற்றியுள்ளது பாஜக அரசு,
இரட்டை வேடம் போடுவதையே பாஜக வாடிக்கையாக வைத்துள்ளது, அம்பானி, அடானி போன்ற சில பண முதலாளிகளுக்கு மட்டுமே மோடி அரசு செயல்பட்டு வந்துள்ளது. இந்த நாட்டு மக்களுக்காக, குறிப்பாக ஏனழ மக்களுக்காக பாஜக அரசு செயல்படவில்லை. பாஜக ஆட்சியில் 1000க்கனக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதுதான் மோடியின் சாதனை. இன்று நாட்டு இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவிப்பதற்கு காரணமே மோடியின் மோசமான ஆட்சிதான் என்றும் சஞ்சய் தத் தெரிவித்தார்.
Also Read
-
“இந்த வெற்றிக்கு காரணமான முதலமைச்சருக்கு நன்றி” - தங்கம் வென்ற கபடி வீரர்கள் நெகிழ்ச்சி!
-
தென்காசி பகுதியில் வெட்டப்பட்ட பனை மரங்கள்.. பரப்பப்படும் வதந்தி... உண்மை என்ன? - TN Fact Check விளக்கம்!
-
"என்னய வச்சி Famous-ஆக நினைக்குறாரு வினோத்" : விஜய் சேதுபதியிடம் குற்றச்சாட்டை அடுக்கிய திவாகர்!
-
“மணத்தி கணேசன் தொடங்கி கார்த்திகா வரை...” பெருமை கொள்ளும் தமிழ்நாடு - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!