murasoli thalayangam

”மக்களால் மூலையில் உட்கார வைக்கப்பட்ட பழனிசாமிக்கு அடக்கம் தேவை” : முரசொலி கண்டனம்!

முரசொலி தலையங்கம் (30-05-2025)

பழனிசாமி அலைகிறார்!

சென்னையில் ஒரு மாணவி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைஎன்பது மாபெரும் கொடூரம் ஆகும். அந்தக் கொடூரம் நடந்த 157 நாட்களுக்குள்குற்றவாளி ஞானசேகரனுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தந்துள்ளதுதமிழ்நாடு காவல்துறை. இது பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘தாமதிக்கப்பட்ட நீதி - மறுக்கப்பட்ட நீதியாக மாறும்' என்பார்கள். அப்படி ஆகாமல் துரிதமாக வழக்கின் விசாரணையை முடித்து தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனை பழனிசாமியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

அவர் பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக இல்லை. ஏதோ ஒன்று அவரை பிடித்து ஆட்டிக் கொண்டு இருக்கிறது. சொந்தக் கட்சியில் தனக்கு ஏற்பட்டு வரும் நெருக்கடியை மறைக்க தி.மு.க. ஆட்சி மீது தினந்தோறும் பாய்ந்து கொண்டிருக்கிறார்.

நாளிதழ்களில் க்ரைம் ரிப்போர்ட்டர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி ஒரு ஜோக் உண்டு. ஏதாவது க்ரைம் நடந்தால்தான், அதை அவர் நியூஸ் ஆக்குவார். க்ரைம் நடக்கவில்லை என்றால் அவரது நியூஸ், நாளிதழில் வராது. அத- னால் தினந்தோறும் காலையில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு போன் செய்வாராம் அந்த ரிப்போர்ட்டர். ரைட்டர் போன் எடுப்பார்.

'ஏதாவது கொலை இருக்கா?' என்று ரிப்போர்ட்டர் கேட்டார்.

'இல்லை' என்பார் ரைட்டர்.

“திருட்டு இருக்கா?' என்று ரிப்போர்ட்டர் கேட்டார் .

'இல்லை' என்பார் ரைட்டர்.

‘செயின் பறிப்பாவது இருக்கா?' என்று ரிப்போர்ட்டர் கேட்டார் .

'இல்லை' என்பார் ரைட்டர்.

'தற்கொலை எதாவது இருக்கா?' என்று ரிப்போர்ட்டர் கேட்டார்.

'இல்லையே' என்பார் ரைட்டர்.

கடைசியில் வெறுத்துப் போன ரிப்போர்ட்டர், 'பாம்பு கடியிலையாவது யாராவது சாகலையா?' என்று கேட்பாராம். அந்த திரைம் ரிப்போர்ட்டர்மாதிரி தினந்தோறும் ஏதாவது நியூஸ் கிடைக்காதா என்று காத்துக் கிடக்கிறார் பழனிசாமி.

சென்னை சம்பவத்துக்கு உரிய நீதி உடனடியாக வாங்கித் தந்ததைக் கூட பழனிசாமியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதற்கும் தி.மு.க. அரசு மீது பாய்கிறார்.

24.12.2024 அன்று பிற்பகல் மாணவி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உடனடியாக தீவிர விசாரணைமேற்கொள்ளப்பட்டது. மறு- நாள் 25.12.2024 அன்று காலை இச்சம்பவத்தில் ஈடுபட்ட கோட்டூர்புரம் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு போக்கிரியான ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இதுதான் காவல் துறை எடுத்த துரிதமான நடவடிக்கை ஆகும். இந்த புகார் தொடர்பான முதல் தகவல் அறிக்கை சமூக ஊடகங்களில் வெளியானது. இது NIC--ல் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறின் காரணமாகவே என நேஷனல் இன்பர்மேடிக்ஸ் சென்டர் விளக்கியுள்ளது. சம்பவம் நடந்த வளாகத்தில் - குறிப்பாக இச்சம்பவம் நடைபெற்ற இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த கண்காணிப்பக் கேமிராக்கள் உதவியடன்தான் குற்றவாளி அடையாளம் காணப்பட்டு- அதனடிப்படையில் காவல்துறை நடத்திய விசாரணையில் குற்றவாளி கைது செய்யப்பட்டார். உடனடியாக அவர் குண்டர் தடுப்புச் சட்டத்திலும் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. இவர்களும் தமிழ்நாடு காவல் துறைதான். சி.பி.ஐ. அல்ல. இது கூட தற்குறி பழனிசாமிக்குத் தெரியவில்லை.

சென்னை மாணவி விவகாரத்தில் மட்டுமின்றி, எந்த பாலியல் வன்கொடுமை புகாரிலும் தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்கவில்லை. ஆனால் தன்னைப்போலவே மற்றவர்களையும் நினைத்துக் கொள்கிறார் பழனிசாமி. “பொள்ளாச்சி சம்பவத்துக்கு ஆதாரம் எங்கே?” என்று நிருபர்களைப் பார்த்துக் கேட்டவர் தான் பழனிசாமி.

பொள்ளாச்சியில் நடந்தது ஒரே ஒரு பாலியல் சம்பவம் அல்ல, தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைகளை இரண்டு ஆண்டுகாலமாக ஒரு கும்பல் செய்து வந்துள்ளது. இதன் மீது அன்றைய அ.தி.மு.க. ஆட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சி.பி.ஐ. வசம் இந்த வழக்கு சென்றபிறகு தான் உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தது.

பொள்ளாச்சி சம்பவமே அ.தி.மு.க. பிரமுகர்களால்தான் நடந்தப்பட்டது என்பதை சி.பி.ஐ. இப்போது நிரூபித்துள்ளது. இதன் பிறகும் வெட்கம் இல்லாமல் பழனிசாமி அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்.

அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களை வசியப்படுத்த ‘பெய்டு கேங்' என்ற ஒரு கும்பல் செயல்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்தக் கும்பல் குறித்த முழு விபரங்களை ‘நக்கீரன்' ஏடு வெளியிட்டது. படங்கள், வீடியோக்- களை வெளியிட்டது. எந்தெந்த நபர்கள் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்று அந்த இதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டது, இதில் சம்பந்தப்பட்ட ஹரீஸ் என்பவருக்கும் அன்றைய அ.தி.மு.க. அமைச்சர் ஒருவரின் மகனுக்கும் தொடர்பு உள்ளது என்று செய்தி வெளியானது.

அந்த ஹரீஸும் கைது செய்யப்பட்டுள்ள ரிஸ்வந்தும் நண்பர்களாக இருந்துள்ளார்கள். இந்த விவகாரம் வெளியானதும் நக்கீரன் இதழுக்கு பேட்டி கொடுத்த ஹரீஸ் அனைவரையும் மிரட்டினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரைச் சொல்லித்தான் அவர் மிரட்டினார்.

சி.பி.சி.ஐ.டி. மூலமாக இந்த விவகாரத்தை மறைக்க நினைத்தது அ.தி.மு.க. அரசு. ஆனால் உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி சி.பி.ஐ.க்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. அந்த சி.பி.ஐ.யிடம் ஆவணங்களை ஒப்படைக்காமல் காலதாமதம் செய்தார்கள். நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை போட்ட பிறகுதான் கொடுத்தார்கள். இதை எல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைக்கிறார் பழனிசாமி. 2019 சம்பவத்துக்கு 2025 ஆம் ஆண்டுதான் தீர்ப்பு வந்தது.

ஆனால் சென்னை சம்பவத்தில் புகார் கொடுத்த அன்றைய தினமே குற்றவாளி கைது செய்யப்பட்டார். 157 ஆவது நாளில் தீர்ப்பு வந்துவிட்டது. தனது கடந்த காலக் கயமைத்தனங்களை மறைப்பதற்காக துடுக்கானஅறிக்கைகளை விடுவதை பழனிசாமி நிறுத்த வேண்டும். மக்களால் மூலையில் உட்கார வைக்கப்பட்ட பழனிசாமிக்கு அடக்கம் தேவை.

Also Read: கீழடி ஆய்வு - “பா.ஜ.க. அரசால் சங்கறுக்கும் காரியம் நடக்கிறது” : முரசொலி கண்டனம்!