murasoli thalayangam
இதையா காந்தியின் கனவு என்கிறார் மோடி? - முரசொலி தலையங்கம்!
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ளது மோடியின் திட்டம் அல்ல; குடியுரிமை சட்டம் காந்தியின் கனவுத் திட்டம். மகாத்மாவின் எண்ணங்களால் ஈர்க்கப்பட்டே இச்சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள், சீக்கயர்கள் மீண்டும் இந்தியாவுக்கு வர விரும்பும்போது அவர்கள் வரவேற்கப் படுவார்கள் என்று காந்திஜி கூறியிருந்தார் என்று பேசியிருக்கிறார்.
காந்தி சொன்னதை அரைகுறையாகப் படித்திருக்கிறார் மோடி. அது ஒரு கலவரக் காலம். இங்கும் அங்கும் கொலைகள் நடந்தது, அதனால் அப்போது இங்கிருந்த இஸ்லாமியர்களையோ, அங்கிருந்து இந்துக்களையோ விரட்டக்கூடாது என்று காந்தி தெரிவித்தார்.
பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் மீண்டும் இந்தியாவுக்கு வந்தால் அவர்கள் வரவேற்கப்படுவார்கள் என்று காந்தி சொன்னதை சொல்லும் பிரதமர் மோடி, காந்தியின் அடுத்த நிபந்தனையை மறந்துவிட்டார், அல்லது மறைத்துவிட்டார்.
காந்தி சொன்னது, “இந்திய யூனியனிலிருந்து வெளியேறும்படி ஒரு முஸ்லிம் மக்களைக்கூட வற்புறுத்தக்கூடாது” என்பதாகும். அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த படேலுக்கு இதுதொடர்பாக காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
அதில் இந்த வாசகம் இருக்கிறது. இந்தக் கோப்புகளை பிரதமர் பார்க்கலாம். குடியுரிமை திருத்தச் சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடும் காந்தியத்துக்கு எதிரானது என முரசொலி தெரிவித்துள்ளது.
Also Read
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !