murasoli thalayangam
அண்ணா, கலைஞர் வளர்த்த தி.மு.க.வுக்கு ‘பயம்’ என்பது வருமா? - முரசொலி தலையங்கம்!
“மக்களைச் சந்திக்க தி.மு.க.வுக்கு பயம்” என்று தமிழக அரசியலில் பெயரைக் கேட்ட உடனே தெரிந்துகொள்ள முடியாத அமைச்சர் ஒருவர் டெல்லிக்குச் சென்று பேசியுள்ளார்.
‘பயம்’ என்றதும் ‘தெனாலி’ எனும் திரைப்படத்தில் பயம் பற்றி வரும் வசனம் நினைவுக்கு வருகிறது. அப்படிப்பட்ட தெனாலிகளின் அமைச்சரவையில் உள்ள ஒருவர், தி.மு.க.வுக்குப் பயம் என்று சொல்லி இருப்பது நிதானமான மனநிலையில் சொன்னாரா அல்லது நிதானம் தவறி நீர்த்துப் போன நிலையிலே சொன்னாரா என்று அவருடைய கட்சிக்காரர்களும் ஊடகத் தோழர்களும் மனதில் சந்தேகம் கொண்டிருக்கிறார்கள்.
தி.மு.கழகத்தின் வரலாற்றையும், அது வளர்ந்து வந்த வரலாற்று நிகழ்வுகளையும் படித்து அறிந்தவர்களும், தெரிந்தவர்களும் பயம் என்ற சொல்லைப் பார்த்தறியாத மாபெரும் மக்கள் இயக்கம் தி.மு.க என்பதனை அறிந்திருக்கிறார்கள்.
குறிப்பாக அண்ணா உருவாக்கி கலைஞர் வழிநடத்தி அறைநூற்றாண்டுகளாக ஆதிக்கத்திற்கு எதிராக ஒடுக்கப்படுபவர்களுக்கு ஆதரவாக போர் புரியும் தி.மு.க.வுக்கு ‘பயம்’ என்பது வருமா?
மேலும் அஞ்சாமை ஒன்றைத் தவிர வேறு துணை தேவையில்லை என்ற குறள் சிந்தனை இருப்பதால், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கோ அவருடைய கழக உடன்பிறப்புகளுக்கோ, பயம் வரவே வராது என்ற உண்மையினை அறிவார்களா, அந்த தெனாலிகள்? என முரசொலி தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!