murasoli thalayangam

“இந்தா, வாங்கிக் கொள் வழக்கு!” - முரசொலி தலையங்கம்

இந்தியாவில் தொடரும் கூட்டு வன்முறைத் தாக்குதலை கண்டித்து இந்திய பிரதமருக்கு 49 ‘இந்தியர்கள்’ கடிதம் எழுதினார்கள். இப்படி ஒரு கடிதத்தை எழுதியதற்காக, நாட்டின் பெயரைக் கெடுத்து பிரிவினைவாதத்தைத் தூண்டுகிறார்கள் என 49 பேர் மீதும் தேசதுரோக வழக்கு பாய்ந்துள்ளது. பா.ஜ.க அரசின் இத்தகைய செயல்பாட்டிற்குப் பெயர் ‘பாசிசம்’ அல்லாமல் வேறு என்ன என்று முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.

இந்திய அரசியலமைப்பு, கருத்துச் சுதந்திரத்தை மக்களுக்கு வழங்குகிறது. அதைச் செயல்படுத்தும் குரல்களில் அரசுக்கு எதிரான குரல்களும் அடக்கம். எந்தவொரு ஆளும் கட்சியும் இந்திய அரசு ஆகாது. எனவே நடக்கும் ஆட்சிக்கு எதிராகப் பேசுவது நாட்டையே எதிர்ப்பதாகாது என முரசொலி தலையங்கம் குறிப்பிட்டுள்ளது.