murasoli thalayangam

மத்திய அரசு ஒதுக்கும் நிதியையும் திருப்பி அனுப்பும் தமிழக அரசு... பள்ளிகள் மூடப்படும் அபாயம் : முரசொலி

தமிழக அரசுக்கு நிதிகளை ஒதுக்கி அனுப்பினால், அதில் பல கோடிகளை அ.தி.மு.க அரசு செலவு செய்யாமல் திருப்பி மத்திய அரசிடம் அனுப்பிவிட்டது. இப்போது பள்ளிகளின் பராமரிப்புப் பணிகளுக்காக மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அரசு தொடக்கப் பள்ளிகளை மூடிவிட்டு, அவற்றுக்காக மானியம் தேவையில்லை என கல்வித்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு இருக்கும் தொடக்கப்பள்ளிகளை மூடிவிட்டு நூலகங்களை திறக்கப்போவதாக அ.தி.மு.க அரசு அறிவித்துள்ளதை முரசொலி சுட்டிக்காட்டியுள்ளது.

கல்வித்துறைக்கு மத்திய அரசு வழங்கும் மானியத்தை முழுமையாகப் பயன்படுத்தி, மாணவர்களை ஈர்க்கும் வகையில் அரசு தொடக்கப்பள்ளிகளின் தோற்றத்தையும், தரத்தையும் மேம்படுத்த வேண்டும் என்றும் முரசொலி வலியுறுத்தியுள்ளது.