M K Stalin
தொடர்ந்து 3 மணி நேரம்...வாழ்த்து மழை பொழியும் தொண்டர்கள்... நின்றுகொண்டே பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திராவிட நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தனது 73 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் நினைவிடத்தில் பணியாற்றக்கூடிய எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் சென்னை வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் திடலில், தந்தை பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து தேனாம்பேட்டையில் அமைந்துள்ள திமுக அலுவலமான அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் அரங்கத்தில் கூட்டணி கட்சியினர், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்று வருகிறார்.
இதில் தொண்டர்கள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பை அளித்ததோடு, அவருக்கு அன்பளிப்புகளையும் வழங்கி வருகின்றனர்.
Also Read
-
வெளியான அதிர்ச்சி காணொளி.. தவெக அரசின் அலட்சியம்.. நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை பிடித்து சிகிச்சை!
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொடூர கொலை.. பின்னணி என்ன?
-
Part Time Job : விளம்பர பதாகை வைத்த நந்தனம் கல்லூரி மாணவருக்கு நேரந்த சோகம்!