M K Stalin

திருவண்ணாமலை மக்களின் நலனுக்காக... ரூ.2,095 கோடியில் திட்டப் பணிகள்... முதலமைச்சர் அசத்தல்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (27.12.2025) திருவண்ணாமலை மாவட்டம், மலப்பாம்பாடி, கலைஞர் திடலில் நடைபெற்ற அரசு விழாவில், 631 கோடியே 48 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் செலவிலான 314 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 63 கோடியே 74 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 46 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 2,66,194 பயனாளிகளுக்கு 1400 கோடியே 57 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

=> திருவண்ணாமலை மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப்பணிகளின் விவரங்கள்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், திருவண்ணாமலை மாநகரில் 12 கோடியே 17 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மக்கள் குறைதீர்வு மையம் மற்றும் இதர அலுவலகக் கட்டடம்;

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், திருவண்ணாமலை மாநகரில் 30 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் மற்றும் 32 கோடியே 16 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காய்கறி, பூ மற்றும் பழச் சந்தை வளாகம், திருவண்ணாமலை மாநகரில் 55 கோடியே 49 இலட்சம் மதிப்பில் குடிநீர் மேம்பாட்டு திட்டப்பணிகள், அண்ணாநகர் சுகாதார நிலையத்தில் 60 இலட்சம் ரூபாய் செலவில் கூடுதல் கட்டடம் மற்றும் 30 இலட்சம் ரூபாய் செலவில் துணை சுகாதார நிலையம்;

திருவத்திபுரம் நகராட்சி – செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையில் 5 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவக் கட்டடம், திருவத்திபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு 1 கோடியே 37 இலட்சம் ரூபாய் செலவில் புதிய வணிக வளாகக் கட்டடம், போளுர் பேரூராட்சியில் 4 கோடியே 3 இலட்சம் மதிப்பீட்டில் புதிய வணிக வளாக கட்டடம், ஆரணி நகராட்சி பகுதி 7 இல் 30 இலட்சம் ரூபாய் செலவில் நகர்ப்புற துணை சுகாதார நிலையக் கட்டடம், சேத்துப்பட்டு சிறப்புநிலை பேரூராட்சி அலுவலகத்திற்கு 1 கோடியே 37 இலட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம், களம்பூர் பேரூராட்சியில் 98 இலட்சம் ரூபாய் செலவில் புதிய சமுதாயக் கூடம்;

உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில், திருவண்ணாமலை மாநகரில் 2 கோடியே 83 இலட்சம் ரூபாய் செலவில் புதிய கோயில் காவல் நிலையம்;

அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில், போளூர் ஊராட்சி ஒன்றியம், கஸ்தம்பாடியில் 22 கோடியே 62 இலட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவில் இலங்கைத் தமிழர்களுக்கான 280 புதிய வீடுகள், குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாலைகள், குடிநீர் வசதிகள், தெரு விளக்குகள் மற்றும் கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள்;

உயர்கல்வித் துறை சார்பில், திருவண்ணாமலை மாநகரில் 7 கோடி ரூபாய் செலவில் கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் 12 வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் 4 ஆய்வுக் கூடங்கள்;

வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், திருவண்ணாமலை மாநகரில் 1 கோடியே 87 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய் செலவில் இணை சார்பதிவாளர் அலுவலகக் கட்டடம்;

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில், திருவண்ணாமலை மாநகரில் 2 கோடியே 99 இலட்சம் ரூபாய் செலவில் ஊரமைப்பு திட்ட அலுவலகக் கட்டடம்;

பள்ளிக் கல்வித் துறை சார்பில், திருவண்ணாமலை மாநகரில் 56 கோடியே 47 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளிக் கட்டடம், ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகள்; 

போளூர், வடமாதிமங்கலம், வடிஇலுப்பை, தச்சூர், நாரையூர், மாமண்டூர், இளங்காடு, வெளுங்கனந்தல் ஆகிய அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள், அரசுவெளி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் 22 கோடியே 73 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், கழிவறைகள் மற்றும் கண்ணமங்கலம், மடம், ஆணைபோகி ஆகிய இடங்களில் 66 இலட்சம் ரூபாய் செலவில் புதிய கிளை நூலக கட்டடம், புதிய ஊர்ப்புற நூலகக் கட்டடங்கள்;

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், செங்கம் அரசு மருத்துவமனையில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை மையக் கட்டடம், தண்டராம்பட்டு மற்றும் வெம்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் 10 கோடி ரூபாய் செலவில் சமூக நல மகப்பேறு மற்றும் சிசு அவசர சிகிச்சை மையங்கள், களம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 இலட்சம் ரூபாய் செலவில் சித்தா பிரிவுக் கட்டடம்;

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை சார்பில், ஜமுனாமரத்தூரில் 6 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாய் செலவில் தடுப்பணை;

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், திருவண்ணாமலை-அரூர் சாலை, ஆற்காடு-திண்டிவனம் சாலை, காஞ்சிபுரம்-திருவத்திபுரம் சாலை ஆகிய இடங்களில் 161 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் இருவழித்தடத்திலிருந்து அகலப்படுத்தப்பட்ட நான்கு வழித்தட சாலைகள், மையத் தடுப்புச் சுவர்கள், சிறுபாலங்கள், மேம்படுத்தப்பட்ட சாலை சந்திப்புகள், பேருந்து நிறுத்துமிடங்கள், பேவர் பிளாக் உள்ளிட்ட பல்வேறு பணிகள், வந்தவாசி வட்டம், மருதாடு-வேப்பங்கரனை சாலை மற்றும் கலசப்பாக்கம் வட்டம், என்.சீ.வீரளூர் சாலை ஆகிய இடங்களில் 14 கோடியே 68 இலட்சத்து 93 ஆயிரம் ரூபாய் செலவில் உயர்மட்டப் பாலங்கள்;

நீர்வளத் துறை சார்பில், காமக்கூர் ஊராட்சி – கமண்டல நாகநதி, படிஅக்ரஹாரம் ஊராட்சி-செய்யாறு, செங்கம் நகரம்-செய்யாறு, மேல்கொடுங்கலூர் ஊராட்சி-சுகநதி, ரெட்டியார்பாளையம்-பாம்பானாறு, தொழுப்பேடு-செய்யாறு, அம்மாபாளையம் ஊராட்சி-நாகநதி ஆகிய இடங்களில் 35 கோடியே ஒரு இலட்சத்து 82 ஆயிரம் ரூபாய் செலவில் தடுப்பணைகள், தண்டராம்பட்டு வட்டம்-ரெட்டியார்பாளையம் ஊராட்சி, சாத்தனூர் அணையில் 15 கோடியே 5 இலட்சத்து 93 ஆயிரம் ரூபாய் செலவில் பணியாளர்கள் குடியிருப்பு மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி;

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், அத்தியந்தல்  ஊராட்சியில் 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம்;

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், பறையம்பட்டு, புதூர் செங்கம், மேல்படூர், மேல்புஞ்சை, கொட்டகுளம், சென்னசமுத்திரம், பரமனந்தல், உச்சிமலைகுப்பம், பழையகுயிலம், கே.கே.நகர், செட்டிதாங்கல், மேல்ராவந்தவாடி, செங்கம், தென்மகாதேவ மங்கலம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலைப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் 1 கோடியே 17 இலட்சம் ரூபாய் செலவில் வைப்பறையுடன் கூடிய சமையலறைக் கட்டடங்கள்;

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்/மகளிர் திட்டம் சார்பில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 10 இலட்சம் ரூபாய் செலவில் மதி சுற்றுலா தல அங்காடிக் கட்டடம்;

ஊரக வளர்ச்சி மறறும் ஊராட்சித் துறை சார்பில், திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 127 கோடியே 20 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடங்கள், பொது விநியோகக் கடைகள், வேளாண் பொருட்கள் சேமிப்புக் கட்டடங்கள், நியாய விலைக் கடை கட்டடங்கள், நவீன எரிவாயு மின் தகன மேடைகள், தார் சலைகள், பயணியர் நிழற்குடைகள், உயர்மட்டப் பாலங்கள், மேம்படுத்தப்பட்ட சாலைகள், கிராம செயலாக்க கட்டடங்கள் என 243 முடிவுற்றப் பணிகள்;  

- என மொத்தம், 631 கோடியே 48 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் செலவிலான 314 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் திறந்து வைத்தார்.

=>திருவண்ணாமலை மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், 9 கோடியே 51 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் செங்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையக் கட்டடப் பணிகள்;

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை சார்பில், சீரான்பாளையத்தில் 15 இலட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வனவர் குடியிருப்பு;

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், வெம்பாக்கத்தில் 3 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  மேற்கூரையுடன் கூடிய புதிய நெல் சேமிப்புக் கிடங்கு;

அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில், 14 கோடியே 85 இலட்சத்து 63 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சமுத்திரம், கனந்தம்பூண்டி, செங்கட்டான்குண்டி ஆகிய இடங்களில் உள்ள இலங்கைவாழ் தமிழர்களுக்கான குடியிருப்பு பகுதிகளில் புதிய சாலைகள், குடிநீர் வசதிகள், தெரு விளக்குகள், கழிவுநீர் கால்வாய் போன்ற பல்வேறு பணிகள், வேலப்பாடி, ஓசூர், எலத்தூர் ஆகிய இடங்களில் உள்ள இலங்கைவாழ் தமிழர்களுக்கு நிரந்தர புதிய வீடுகள்;

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில், நாவல்பாக்கம், ஆக்கூர், வழுர், தச்சூர், எஸ்.வி.நகரம், கொம்பனந்தல், செங்கம் மேல் பள்ளிப்பட்டு, சே.கூடலூர், கீழ்பென்னாத்தூர் ஆகிய இடங்களில் 1 கோடியே 20 இலட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஓரிட சேவை மையக் கட்டிடங்கள்;

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், திருவண்ணமாலை மாவட்டத்தின் பல்வேறுப் பகுதிகளில் 33 கோடியே 37 இலட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மெய்யூர் ஊராட்சியில் நவீன பன்னோக்கு அரங்கம், காரப்பட்டு-மட்டவெட்டு, ஜப்திகாரியந்தல்-அல்லியந்தல், கானமலை-கமண்ட நதி, தஞ்சம்பாறை-இருளம்பாறை ஆகிய இடங்களில் உயர்மட்டப் பாலங்கள், மேல்ராவந்தவாடி, மன்மலை, மேல்பாலூர், காட்டுமலையனூர், புதுப்பாளையம், கல்பட்டு, தாமரைபாக்கம், காஞ்சி, மலைமஞ்சனூர், இனம்காரியந்தல், நாயுடுமங்கலம், அண்டம்பள்ளம், 12புதூர், அரியப்பாடி, பூசிமலைக்குப்பம், ஓதலவாடி, கழனிப்பாக்கம், குன்னகம்பூண்டி, கூத்தம்பட்டு, வெளியாம்பாக்கம், நாட்டேரி, 5புதூர் ஆகிய இடங்களில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள்;  

- என மொத்தம், 63 கோடியே 74 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 46 புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் அடிக்கல் நாட்டினார். 

=> திருவண்ணாமலை மாவட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், 36,640 பயனாளிகளுக்கு சிறப்பு வீட்டுமனைப் பட்டா, வீட்டுமனைப் பட்டா, உட்பிரிவு மாற்றம், முழுபுலம் பட்டா மாற்றம் மற்றும் 3485 பயனாளிகளுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ்கள், சிறு குறு விவசாயி சான்று, முதல் பட்டதாரி சான்று, ஆதரவற்ற விதவை சான்று, விபத்து நிவாரண நிதி, முதலமைச்சரின் பொது நிவாரணத் தொகை, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்ட முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளி உதவித் தொகை, விதவை உதவித் தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை, தேசிய இந்திரா காந்தி முதியோர் மற்றும் விதவை உதவித் தொகை, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் திருமணம், இயற்கை மரணம், கல்வி, தற்காலிக இயலாமை ஆகியவற்றிற்கான உதவித் தொகை என பல்வேறு உதவிகள்;

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 4467 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தனி நபர் வீடுகள், முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டம், பிரதமரின் ஊரக குடியிருப்புகள் திட்டத்தின் கீழ் வீடுகள், பழங்குடியினர்களுக்கான தனி நபர் வீடுகள், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தனி நபர் கழிவறைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகள், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், 600 பயனாளிகளுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நுன்நிதி கடனுதவி;

தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் – மகளிர் திட்டத்தின் சார்பில், 1,27,582 பயனாளிகளுக்கு மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வங்கி கடன் இணைப்பு, தாயுமானவர் திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்ட மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்கள், நலிவுற்றோர்களுக்கான நலிவு நிலை குறைப்பு நிதி, மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி மற்றும் அடையாள அட்டைகள்;

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில், 729 பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், செயற்கை கால், முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், விபத்து நிவாரணம், கல்வி உதவித் தொகை, வங்கி கடன் மானியம், காதொலிக் கருவி, சக்கர நாற்காலி, மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை, பேட்டரி சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை, திறன்பேசி போன்ற பல்வேறு உதவிகள்;

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், 1,539 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், 23,729 பயனாளிகளுக்கு பயிர்க் கடன், கால்நடை வளர்ப்பு மூலதனக் கடன், மத்திய கால கடன், வீட்டு வசதி கடன், மகளிர் சு உதவிக் குழு கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், மாற்றுத் திறனாளிகள் கடன், சிறுவணிகக் கடன், சிறு குறு தொழில் முனைவோர் கடன், தானிய ஈட்டுக் கடன், டாட்செட்கோ கடன், டாம்கோ கடன், ஆதரவற்ற விதவைகள் கடன், நாட்டுப்புற கலைஞர் கடன், கல்விக் கடன், கலைஞர் கனவு இல்லம், விவசாய மதிப்பு கூட்டுப் பொருட்களுக்கான கடன்;

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில், 13,069 பயனாளிகளுக்கு பழங்குடியினருக்கான இலவச கறவை மாடுகள் மற்றும் நல வாரிய அடையாள அட்டைகள், இலவச தையல் இயந்திரங்கள், இலவச சலவைப் பெட்டி, முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவிகள், நன்னிலம் மகளிர் நில உடமைத் திட்டம், தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய அடையாள அட்டை, கல்வி, திருமணம், இயற்கை மரணம் ஆகியவற்றிற்கான உதவித் தொகை;

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில், 14,453 பயனாளிகளுக்கு விலையில்லா சலவைப் பெட்டி, திரவ பெட்ரோலிய சலவைப் பெட்டி, தையல் இயந்திரம், டாம்கோ கடனுதவி, பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டிகள்;

தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், 170 பயனாளிகளுக்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம், கலைஞரின் கைவினைத் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம், படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவிகள்;

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், 849 பயனாளிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், கட்டிட அனுமதி, புதிய குடிநீர் இணைப்பு, தொழில் வரி பெயர் மாற்றம், சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகள்;

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில், 5010 பயனாளிகளுக்கு விவசாயிகளுக்கு விதைகள், விவசாய இடு பொருட்கள், ஒருங்கிணைந்த பண்ணையம், பயறு செயல்விளக்கம், பயறு விதை விநியோகம், புதர் நீக்கம், நெல் இயந்திர நடவு, மக்காச்சோளம் செயல்விளக்கம், நெல் விதை விநியோகம், மணிலா செயல்விளக்கம் போன்ற உதவிகள்;

தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில், 2,400 பயனாளிகளுக்கு நுண்நீர் பாசனத் திட்டம், விவசாயிகளுக்கு வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கான தளைகள் விநியோகம், தனிநபர் நீர் சேகரிப்பு அமைப்பு, தேசிய தோட்டக்கலை இயக்கம், மானாவாரி நில மேம்பாட்டு திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம், இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கம், கல்பந்தல் இயக்கம் ஆகியவற்றின் கீழ் உதவிகள்;

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில், 123 பயனாளிகளுக்கு முதல்வரின் உழவர் நல சேவை மைய திட்டத்தின் கீழ் வேளாண் இடுபொருள் அங்காடி அமைக்க மானியத்துடன் கூடிய கடனுதவி, 100 மதிப்பு கூட்டு மையங்கள், முதன்மை பதப்படுத்தும் நிலையம் ஆகியவற்றை அமைப்பதற்கு மானியத்துடன் கூடிய கடனுதவிகள், உழவர் சந்தை அடையாள அட்டைகள்;

வேளாண்மை பொறியியல் துறை சார்பில், 459 பயனாளிகளுக்கு விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் மானியத்தில் ஆழ்துளை கிணறு, மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள், பண்ணைக்குட்டை அமைத்தல், சூரிய சக்தியால் இயங்கும் மின்மோட்டார்கள், பயிர்சாகுபடியில் விதைப்பு முதல் அறுவடை வரை இயந்திரமயமாக்குதல், திறந்தவெளி கிணறு, புனரமைத்தல், மின்மோட்டார், சூரிய கூடார உலர்த்தி, அறுவடை பின்சார் தொழற்நுட்பம் போன்ற பல்வேறு உதவிகள்; 

கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை சார்பில், 46 பயனாளிகளுக்கு மல்பரி நடவு மானியம், புழு வளர்ப்பு மனை மானியம், நெசவாளர் முத்ரா கடன்;

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில், 10,371 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ஜவ்வாது மலை மற்றும் கலசப்பாக்கம் ஒன்றியங்களில் ஊரக ஏழை கால்நடை விவசாயிகளின் சினையுற்ற கறவைப்பசுக்களுக்கு 50 சதவீதம் மானியத்துடன் ஊட்டச்சத்து, மின்சாரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவி, நாட்டுக்கோழிப் பண்ணை 250 கோழிகள்/அலகு ஆகியவை 50 சதவீதம் மானியத்துடன் வழங்குதல், மீன்பிடி வலைகள் வாங்க மானியம், அலைகள் திட்டத்தின் கீழ் மீனவ மகளிர் கூட்டு பொறுப்பு குழுக்களுக்கு நுண்கடன், சிறிய அளவிலான பால் பண்ணை, கால்நடை காப்பீடு, முதல்வரின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் சங்க செயலாளர்களுக்கு பயிற்சி;

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், 705 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதி உதவித் திட்டம்,  அன்னை தெரசா ஆதரவற்ற பெண் திருமண நிதி உதவித் திட்டம் ஆகியவற்றின் கீழ் உதவிகள்;

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், 8,877 பயனாளிகளுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம், தாய் சேய் நலப் பெட்டகம் வழங்கும் திட்டம், கலைஞர் கண்ணொளி காப்போம் திட்டம், முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டைகள்;

பள்ளிக் கல்வித் துறை சார்பில், 306 பயனாளிகளுக்கு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்பு நிதி, மாற்றுத்திறன் கொண்ட பள்ளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள், நிதித் துறை-வங்கிகள் சார்பில், 31 பயனாளிகளுக்கு கல்விக் கடன் உதவிகள்;

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், 8384 பயனாளிகளுக்கு  விபத்து நிவாரண நிதி, கட்டுமானம் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம், வாரிய பதிவு அட்டை, கல்வி உதவித் தொகை, இயற்கை மரண நிவாரண நிதி, தமிழ்நாடு ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர் நல வாரியம் கல்வி உதவித் தொகை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டம், வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு குறுகிய கால திறன் பயிற்சி;

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை சார்பில், 220 பயனாளிகளுக்கு பழங்குடியினர் சூழல் மேம்பாட்டு குழு உறுப்பினர்களுக்கு சிறுகடன், பண்ணைகுட்டை அமைத்தல், விவசாய நிலங்களில் கல்வரப்பு அமைத்தல், மலைவாழ் மக்கள் நிலங்களில் மண்வள பாதுகாப்பிற்கு தடுப்பணை தூர்வாறுதல், பழங்குடியினர்களின் பண்ணைகுட்டை, கிணறு தூர்வாருதல் போன்ற பல்வேறு உதவிகள்;

உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில், 31 பயனாளிகளுக்கு மதுவிலக்கு குற்றவாளிகளில் மனம் திருந்தியவர்களுக்கு மறுவாழ்வு நிதி உதவித் தொகை;

எரிசக்தித் துறை சார்பில், 1475 பயனாளிகளுக்கு சூரிய சக்தி மின் அமைப்பு அமைக்க மானியம், விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்புகள்;

பொதுத் துறை-முன்னாள் இராணுவத்தினர் நலன் சார்பில், 405 பயனாளிகளுக்கு முன்னாள் இராணுவத்தினர்களுக்கான திருமணம், கல்வி, இயற்கை மரணம், கண் கண்ணாடி, மாதாந்திர நிதி ஆகியவற்றிற்கான உதவித் தொகைகள்;

- என பல்வேறு துறைகளின் சார்பில், மொத்தம் 1400 கோடியே 57 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2,66,194 பயனாளிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் வழங்கினார்.

Also Read: “உழவர்களையும் தொழில்நுட்பம் சென்றடைவதே உண்மையான வளர்ச்சி” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!