M K Stalin
“சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகைகள் ‘ராஜ் பவன்’ என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில், அதனை ‘லோக் பவன்’ என்று பெயர் மாற்றம் செய்துள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு.
இந்திய கூட்டாட்சியில் ஆளுநர்கள் என்ற பொறுப்பே கேள்விக்குள்ளாகி வரும் சூழலில், மாநில அரசுகளின் நிதியால் இயங்கும் ஆளுநர் மாளிகைகளுக்கு ஒன்றிய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.
குறிப்பாக, தமிழ்நாட்டின் பண்பாட்டையும் தமிழர்களின் உரிமைப் போராட்டங்களையும் விமர்சிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி போன்றோரின் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்காத ஒன்றிய அரசு, தற்போது பெயர் மாற்ற உத்தரவிற்கு மட்டும் முன்வந்துள்ளது.
இந்நிலையில் இதனைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தது பின்வருமாறு,
“பெயர் மாற்றத்தைவிடச் சிந்தனை மாற்றமே தேவை!
சட்டமன்றம் = மக்கள் மன்றம்! சட்டமன்றத்தை மதிக்காதவர்கள், “மக்கள் மாளிகை” எனப் பெயர் மாற்றுவது கண் துடைப்பா? மக்களாட்சித் தத்துவத்தின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளையும், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற இறையாண்மையுள்ள சட்டமன்றத்தையும் மதிப்பதுதான் இப்போதைய தேவை!
சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே!”
Also Read
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!
-
“வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை ஈட்டுவாரா முதலமைச்சர்?” : டி.ஆர்.பி.ராஜா கேள்வி!