M K Stalin
“‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ - நாட்டின் ஜனநாயகத்தையும், பன்முகத்தன்மையையும் அழித்துவிடும்!” : முதலமைச்சர்!
உலகின் மிகப்பெரிய மக்களாட்சி என அடையாளப்படுத்தப்படும் இந்தியாவில், மக்களாட்சி நடக்கிறதா என்ற கேள்வி, கடந்த 10 ஆண்டுகளில் வலுத்துள்ளது.
குறிப்பாக, நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் நடந்த குளறுபடிகளும், மோசடிகளும் அதனை மேலும் தெளிவுபடுத்துவதாய் இருக்கின்றன. 18 வயது நிரம்பாதவர்கள், வாக்களிக்கவே தகுதிபெறாதவர்களாக இருக்கும் நிலையில், வாக்கு இயந்திரங்களை 10 வயது சிறுவர் பொம்மை போல் கையாண்டதும்; வாக்குச்சாவடிகளுக்குள் வழிபாடு நடத்தப்பட்டதும்; சிறுபான்மையினர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டதும்; மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குச்சாவடிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும், அதற்கு எடுத்துகாட்டுகளாக அமைந்தவையே.
இவ்வாறான நிகழ்வுகளே, மக்களாட்சி நடைமுறையை பாதி ஒழித்துவிட்ட நிலையில், மேலும் ஒழிக்கும் நடைமுறையாக தான், ஒரே நாடு - ஒரே தேர்தல் கருதப்படுகிறது.
காரணம், தென் இந்திய மக்களின் அரசியல் புரிதலும், வடகிழக்கு மக்களின் அரசியல் புரிதலும், வட இந்திய மக்களின் அரசியல் புரிதலும், பல வகையில் மாறுபட்டது. ஒரு மாநிலத்தில் முன்னெடுக்கப்படுகிற பிரச்சாரங்களை, மற்றொரு மாநிலத்தில் முன்னெடுத்தால் எடுபடாமல் போக பல வாய்ப்புகள் உள்ளன.
இந்த வேற்றுமையால், பா.ஜ.க.வினரை பொறுத்தவரை, தெற்கில் ஆட்சியைக் கைப்பற்றுவது என்பது முற்றிலும் இயலாததாய் அமைந்துள்ளது. இச்சூழலை தவிடுபொடியாக்க ஒன்றிய பா.ஜ.க அரசால் முன்மொழிந்துள்ள திட்டம் தான் ஒரே நாடு - ஒரே தேர்தல்.
இந்நிலையில் ஒரே நாடு - ஒரே தேர்தல் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட இருக்கிறது என்ற செய்தியைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஜனநாயகத்தையும் கொன்றொழித்து, ஒற்றையாட்சி முறை எனும் பேரழிவுக்குள் நாட்டைத் தள்ளிவிடும் என்பதால், கூட்டாட்சியியலுக்கு எதிரானதும், நடைமுறைச் சாத்தியமற்றதுமான ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை இந்தியா உறுதியாக எதிர்க்கும்!
அதிபர் தேர்தல் நடத்துவது போல பொதுத்தேர்தல்களை நடத்தும் உள்நோக்கத்துடன் இத்திட்டத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு திணிக்கிறது. இது நமது அரசியலமைப்பின் ஆன்மாவுக்கு எதிரானதாகும்.
நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்தால்… நமது அரசியலமைப்பை வடித்துத் தந்தோர் நம் நாடு அராஜகத்துக்குள்ளும் முற்றதிகாரத்துக்குள்ளும் நழுவி வீழ்ந்துவிடாமல் தடுப்பதற்காக, குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல்களை நடத்தப்படுவதன் மூலமாக சட்டரீதியாக அமைத்த அரண்கள் நீக்கப்படும்.
மாநிலச் சட்டமன்றத் தேர்தல்கள் தங்கள் முக்கியத்துவத்தை இழந்துவிடும். மாநில உணர்வுகளும் பன்முகத்தன்மையும் அழிக்கப்படும். இந்திய அரசியலை என்றென்றைக்குமாக மாற்றியமைத்துவிடக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்த இத்தகைய சட்டத்தை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் பாரதீய ஜனதா கட்சிக்கு இல்லை.
ஆனாலும், பழிவாங்கும் எண்ணத்துடனும், நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் மையமான பிரச்சினைகளை எதிர்கொள்வதில் பா.ஜ.க. அடைந்துள்ள தோல்விகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பவும் இத்தகைய அடாவடி முயற்சியை மேற்கொள்கிறது. தேர்தல் சீர்திருத்தம் என்ற பெயரில் திணிக்கப்படும் இந்த அருவருப்பான நடவடிக்கையைத் தீவிரமாக எதிர்ப்பதில் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்! இந்தியாவை, அதன் பன்முகத்தன்மையை, அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும்!” என தனது X சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!