M K Stalin
பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
சேலம் மாவட்டத்தில் பிறந்த பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், தனது சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைக்கதைகளால் அறியப்பட்டவர்.
சேலத்தில் பிறந்து மதுரையில் வசித்து வந்த இவர், வீட்டில் தவறி விழுந்ததால், உயிர் பிரிந்துள்ளது. இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மர்மமும் அமானுஷ்யமும் நிறைந்த புனைவுகளை எழுதுவதில் தேர்ந்தவரான இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் நூற்றுக்கணக்கான நூல்களைப் படைத்தவர். வரலாற்றுக் காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்துச் சுவாரசியமான முறையில் புதினங்களைப் புனைவதில் வல்லவர்.
வெற்றிகரமான பல தொலைக்காட்சித் தொடர்களிலும் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் பங்காற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஜனவரிக்குள் 1 கிலோ அரிசி விலை ரூ.120-ஆக உயரும் அபாயம்! - த.வெ.க.வின் தோல்வியால் தவிக்கும் மக்கள்!
-
த.வெ.க எம்.எல்.ஏ. சரவணன் மீது பணமோசடி புகார் : “இதுதான் தூய ஆட்சியின் லட்சணமா?” - கனிமொழி எம்.பி. சாடல்!
-
“பாலுக்கு காவல், பூனைக்கு தோழனா?” : விஜய்யின் Double Action-க்கு தயாநிதி மாறன் கண்டனம்!
-
தேசிய விருதுகள் முதல் பத்ம ஸ்ரீ விருதுகள் வரை.. காலா பட நடிகர் நானா படேகர் காலமானார்!
-
குடிநீர் தொட்டியில் மலம்.. மூடி மறைத்த அரசுப் பள்ளி நிர்வாகம்.. 2 நாட்களாக அவலம்!