M K Stalin
"இந்தியாவை காப்பாற்ற நாம் அகில இந்திய அளவில் வெல்ல வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு !
தி.மு.க. மாநில விவசாய அணி துணைச் செயலாளர் நல்லசேதுபதி இல்லத் திருமண விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்கள் பக்வத்ஜெகன் - வித்யா இணைக்கு திருமணம் செய்து வைத்து வாழ்த்து தெரிவித்தார்.
திருமண நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த திருமணம் சீர்திருத்த மற்றும் சுய மரியாதை திருமணமாக நடைபெற்றது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.
மேலும், ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு இல்லாதபோதும், மோசமான நிதிச்சூழலிலும் தமிழ்நாடு தொடர்ந்து இந்தியாவின் சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அதோடு நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைவரும் தயாராக வேண்டும் என கேட்டுக் கொண்ட முதலமைச்சர், நாட்டைக் காக்க நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார். மேலும், பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை கட்சியினர் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இந்த திருமண நிகழ்ச்சியில், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
Also Read
-
காசா நகரின் 40% பகுதிகளை கைப்பற்றிவிட்டோம், மீதம் இருக்கும் பகுதி விரைவில்... - இஸ்ரேல் அறிவிப்பு !
-
"தமிழ்நாட்டில் பெயர்களுக்கு பின்னால் சாதி இல்லை, பட்டம்தான் உள்ளது" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !