M K Stalin
புயல், மழையால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கிய மு.க.ஸ்டாலின்!
திருவாரூர் மாவட்டத்தில் புரெவி புயல் காரணமாக கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதனால், ஆறுகள் மற்றும் குளங்கள் முழுவதும் நிரம்பியதால் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நேற்று இரவு திருவாரூர் வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொரக்குடி மற்றும் பண்ணைவிளாகம் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார்.
இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் அருகே காவனூர் ஊராட்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அங்கிருந்து திருமதிகுன்னம், கண்கொடுதவனிதம், தாழைக்குடி, எருக்காட்டூர், கமலாபுரம், கீழமணலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார்.
பின்னர் திருவாரூர் மாவட்டத்தில் இறுதியாக கச்சனம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சென்றார்.
இந்த நிகழ்வின் போது தி.மு.கழக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளருமாண பூண்டி கலைவாணன், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, முன்னாள் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன், சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பி ராஜா, ஆடலரசன், மதிவாணன் உட்பட ஒன்றிய நகர செயலாளர்கள் சார்பு அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!