M K Stalin
ஊடகத்துறையில் கொரோனாவுக்கு முதல் பலி: “இது தாங்கவியலாத் துயரத்தை அளிக்கிறது” - மு.க.ஸ்டாலின் இரங்கல்!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது. அதிலும், முன்கள வீரர்களாக பணியாற்றும் மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகத்துறையைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், ஒளிப்பதிவாளர்களுக்கும் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்த வேல்முருகன் என்ற ஒளிப்பதிவாளர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒளிப்பதிவாளர் வேல்முருகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “கோவிட்19 பாதிப்பு காரணமாகக் கடந்த 15 நாட்களுக்கும் மேலாகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜ் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி கடும் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் அளிக்கிறது.
மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் போல ஊடகத்துறையினரும் இந்த கொரோனா காலத்தில் மக்கள் நலனுக்காக முன்கள வீரர்களாகப் பணியாற்றி வருகிறார்கள். அத்தகைய நிலையில், தமிழ் ஊடகத்துறையில் முதல் உயிரிழப்பு என்பது தாங்கவியலாத் துயரத்தை அளிக்கிறது.
Also Read: “இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை தாண்டியது” - ஒரு வாரத்தில் ஒரு லட்சம் பேருக்குப் பாதிப்பு!
ராஜ் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் அவர்களின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அவர்தம் குடும்பத்தார், உறவினர், நண்பர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் நலனில் அக்கறை கொண்டு செய்தி சேகரிப்புப் பணியில் ஈடுபடும் ஊடகத் துறை நண்பர்கள் அனைவரும் தங்களின் பாதுகாப்பிலும் தனிப்பட்ட கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
"கனமழையை சமாளிக்க அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் தயார் நிலையில் உள்ளோம்" - துணை முதலமைச்சர் உதயநிதி!
-
"பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அதிமுகவே முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை" - முரசொலி விமர்சனம்.
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !