M K Stalin
5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: இதிலாவது உறுதியாக இருங்கள் - அ.தி.மு.க அரசுக்கு மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!
குலக்கல்வியை கொண்டு வரும் நோக்கில், புதிய கல்விக்கொள்கையை அறிமுகப்படுத்தியது பா.ஜ.க. அரசு. அதற்கு துளியளவும் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆமோதிக்கும் வகையிலேயே செயல்பட்டு வரும் எடப்பாடியின் அ.தி.மு.க அரசுக்கு எதிராக அரசியல் கட்சிகளும், மக்களும் தொடர்ந்து கண்டனங்களும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
புதியக் கல்விக் கொள்கைக்கான முன்னோட்டமாக 5 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளான பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என டெல்லியில் வந்த உத்தரவை அரசியல் ஆதாயத்திற்காக தலையை அசைத்து அதனை அமல்படுத்தும் நோக்கில் இருந்தது அ.தி.மு.க அரசு.
இந்த பொதுத்தேர்வு உத்தரவுக்கு எதிராக தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்ததை அடுத்து, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அ.தி.மு.க அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 5,8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், “டெல்லி எஜமானர்களின் கைப்பாவையாக உள்ள அ.தி.மு.க ஆட்சியாளர்கள் அதற்குச் செவிமடுக்க மறுத்து அமைதி காத்தது மட்டுமின்றி - ஒட்டுமொத்தத் தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி பொதுத்தேர்வு உண்டு என அரசாணை பிறப்பித்தனர்.”
“தற்போது திடீர் 'ஞானோதயம்' ஏற்பட்டது போல பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளனர். இதிலாவது தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கைக்கு அ.தி.மு.க அரசு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து - மாநிலத்தின் கல்வி உரிமையை நிலை நாட்டிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!