M K Stalin
ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவே அ.தி.மு.க-வினர் ஆர்வம் காட்டி வருகின்றனர் - மு.க.ஸ்டாலின்
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பாளைய செட்டிக்குளம், மேலகுளம், அரியகுளம் பகுதிகளில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தொகுதி மக்களிடம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அங்கிருந்த மக்களிடம் பேசிய அவர், ''தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
மக்களைப் பற்றி கவலைப்படாத ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவே அ.தி.மு.க ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தேர்தல் வந்துள்ளதால் அமைச்சர்கள் வருவார்கள், மற்ற நேரத்தில் மக்கள் குறையை கேட்க வர மாட்டார்கள்.
உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பதாலேயே மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை. உள்ளாட்சி தேர்தலை இந்த அரசு வேண்டுமென்றே நடத்தாமல் இருக்கிறது, தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் உடனடியாக நடத்தப்படும்.
புதிய தொழிற்சாலைகளை அமைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் முதல்வரும்,அமைச்சர்களும் வெளிநாடுகளுக்கு சென்று ஊர் சுற்றி வருகின்றனர்'' எனத் தெரிவித்தார்.
Also Read
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையங்களாக 48 காவல் நிலையங்கள் தேர்வு... முழு விவரம் உள்ளே !
-
பெரியாரும், அம்பேத்கரும் உரையாடும் புகைப்படம்... அம்பேத்கர் இல்லத்தை பார்வையிட்ட முதலமைச்சர்!
-
“சமூகம் மேம்பட, சங்கிகள் கதற பெரியாரியம் உலகமயம் ஆகட்டும்!” - முரசொலி தலையங்கம்!