M K Stalin
வேலூரில் தீவிர பரப்புரையை தொடங்கினார் தலைவர் மு.க.ஸ்டாலின்..
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.
ஆகையால், கதிர் ஆனந்தை ஆதரித்து வேலூரில் இரண்டு கட்டங்களாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். பரப்புரை மேற்கொள்வார் என தலைமைக் கழகம் அறிவித்திருந்தது.
இதனையடுத்து இன்று காலை வேலூரில் தனது முதற்கட்ட தேர்தல் பரப்புரையை தொடங்கிய மு.க.ஸ்டாலின், உழவர் சந்தைப் பகுதியில் வேட்பாளர் கதிர் ஆனந்துடன் நடைபயணமாகச் சென்று வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் திரண்டு மாலை அணிவித்து வரவேற்பளித்தனர். மேலும், பலர் திரண்டு அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
வாக்கு சேகரிப்பின் போது, கழக பொருளாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் பொன்முடி, கழக மாவட்டச் செயலாளர் நந்தக்குமார், சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செக்கமேடு, ஆலங்காயம், பெருமாள் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை பரப்புரை மேற்கொள்கிறார். அதேபோல், அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேலப்பாடி, அல்லாப்புரம், துரைப்பாடி உள்ளிட்ட 11 பகுதிகளில் நாளை மறுநாள் வாக்கு சேகரிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 1ம் தேதி ஆம்பூர், இரண்டாம் தேதி குடியாத்தம், மூன்றாம் தேதி வேலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!